twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்சி பாகுபாடில்லாமல் கத்தியைப் பார்த்து வெற்றி பெற வையுங்கள் - திமுக எம்.எல்.ஏ. கோரிக்கை

    |

    சென்னை: கட்சிப் பாகுபாடில்லாமல் அனைவரும் முன்வந்து கத்திப் படத்தை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. முன்னதாக இவர்கள் கூட்டணியில் உருவான துப்பாக்கி படம் வெற்றி பெற்றதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தில் விஜயின் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

    இதற்கிடையே, கத்தி படத்தை தயாரிக்கும் லைகா ராஜபக்சேவின் உறவினர் கம்பெனி என்பதால், அப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்தது.

    எதிர்ப்பு...

    தமிழ் ஆதரவாளர்களும், கட்சித் தலைவர்களுமான சீமான், வேல்முருகன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கத்தி படத்தை வெளியிடக் கூடாது தடை விதிக்க வேண்டும் என தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

    சினிமாவை அரசியலாக்காதீர்கள்...

    இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கத்திப் படத்திற்கு என்றில்லை பொதுவாகவே சினிமா என்ற ஊடகத்திற்கு எனது ஆதரவு உண்டு. சினிமாவை அரசியலாக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பொழுதுபோக்கு அம்சம் ...

    பொழுதுபோக்கு அம்சம் ...

    மேலும், ஒரு சினிமா தயாரிப்பது என்பது எவ்வளவு கஷ்டமான விசயம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் எத்தனை பேருடைய உழைப்பு அடங்கி இருக்கிறது. திரைப்படத்தை பொழுதுபோக்கும் அம்சமாக மட்டுமே பார்க்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    வெற்றி பெற வேண்டும்...

    அதேசமயம், கத்தி படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பிற தலைவர்கள் குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள அன்பழகன், கத்தி படம் திட்டமிடப்பட்ட தேதியில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என அதில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    திறமையான நடிப்பு...

    திறமையான நடிப்பு...

    மேலும், கத்தி படத்தில் விஜய் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டியுள்ளார் அன்பழகன்.

    English summary
    The DMK MLA J. Anbazhagan has extended his support to actor Vijay 's Kathi film, which is struggling for the release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X