இதுக்கு மேல யாரும் பொறுமையா இருக்க முடியாது.. வலிமை அப்டேட் கேட்கும் பிரபல திமுக எம்எல்ஏ!
சென்னை: திமுக எம்எல்ஏவான டிஆர்பி ராஜா வலிமை படத்தின் அப்டேட் கேட்டு டிவிட்டியுள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை.பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச் வினோத்துடன் நடிகர் அஜித் மீண்டும் கைகோர்த்துள்ள படம் வலிமை.

ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில் லாக்டவுன் காரணமாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. சூழ்நிலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

ஃபேமிலி சப்ஜெக்ட்
படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஒரு சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் காட்சியாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் படம் ஆக்ஷன் கம் ஃபேமிலி சப்ஜெக்ட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கெஞ்சிய ரசிகர்கள்
படத்தின் டைட்டிலுக்கு பிறகு பெரிதாக படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வந்தது போன்று தெரியவில்லை. இதனால் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என அஜித்தின் ரசிகர்கள் பிரதமர், முதல்வர் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரிடமும் கேட்டு வந்தனர்.

போனி கபூர் தகவல்
தன்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் முக்கிய தலைவர்களிடம் வலிமை அப்டேட் கேட்பது வருத்தமடைய செய்வதாக கூறி வருத்தப்பட்டார் அஜித். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசன், தான் வெற்றி பெற்றால் வலிமை படத்தின் அப்டேட் கிடைக்கும் என்று கூறினார்.
Recommended Video

கொரோனா பெருந்தொற்று
இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வலிமை படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கூறியிருந்தார். ஆனால் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் அப்டேட் வெளியிடப்படவில்லை.

அப்டேட் கேட்ட ரசிகர்
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுக்கு மேல முடியாது
இந்நிலையில் திமுக எம்எல்ஏவான டிஆர்பி ராஜா வலிமை அப்டேட் கேட்டு டிவிட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் இதுக்கு மேல யாரும் பொறுமையா இருக்க முடியாது.. வலிமை அப்டேட் எப்பதான் வரும் என கேட்டுள்ளார்.

நம்ம லிஸ்ட்லேயே இல்லையே
டிஆர்பி ராஜாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், ஜெயிச்சா வலிமை அப்டேட் வாங்கி தருவதாக வானதி சீனிவாசன் கூறியதை குறிப்பிட்டுள்ளார. அதற்கு
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ஸ்மைலிங் ஈமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார் டிஆர்பி ராஜா.


Click it and Unblock the Notifications











