தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது.. ரஜினிகாந்துக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு, உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #Rajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்துக்கு, தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











