முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது.. தேசியவிருது பெறுபவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: தேசிய விருது பெறும் கலைஞர்களுக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 67வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுஷ், சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு விஜய் சேதுபதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டி இமானுக்கு விருது

டி இமானுக்கு விருது

பாத்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்கு டி இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதுக்கு கேடி கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷால் தேர்வாகியுள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்களுக்கு திரை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அசுரன் வெற்றிமாறன்

அசுரன் வெற்றிமாறன்

அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினும் தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, தேசிய விருது பெறும் திரைக்கலைஞர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் மற்றும் இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள்!

மகிழ்கிறேன்..

அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்! மென்மேலும் சிறப்புகளைப் பெறுக! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X