துணை முதலமைச்சர் உதயநிதி சொத்து மதிப்பு எவ்வளவு? இத்தனை கோடிகளுக்கு அதிபதியா?

சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் அவர் செய்திருந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் அவர் அசையும் சொத்து மதிப்பு ரூபாய் 12.9 கோடிக்கும் அசையா சொத்து மதிப்பு ரூபாய் 7.72 கோடிக்கும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான டிபன்டர் கார் ரூபாய் 23 லட்சம் மதிப்பிலான ஆன இன்னோவா கார் தன்னிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அடிப்படையில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தமிழ்நாட்டில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனமாக அவரது நிறுவனம் இயங்கி வந்தது. தீவிர அரசியலில் களமிறங்கிய பிறகும் படங்களை தயாரிப்பது விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளையும் அவர் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரது மகன் இன்பநிதிக்கு நிறுவனத்தின் மொத்த பொறுப்புகளையும் ஒப்படைத்ததால் தற்போது அவருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் சட்ட ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. இதனால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தொடர்பாக தனது வேட்பு மனுவில் எதுவும் அவர் குறிப்பிடவில்லை.

DMK Udhayanidhi Stalin Declares Assets Worth 20 Crore in Nomination Details Inside

அரசியல் ஈடுபாடு: உதயநிதி ஸ்டாலின் அரசியலில் களமிறங்கிய போது பலரும் அவர் அரசியலில் எந்த அளவுக்கு ஈடுபாடுடன் இருப்பார் என்ற கேள்வியை முன் வைத்தனர். ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் நடத்திய பிரசாரம் பெருமளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதுவும் குறிப்பாக ஒற்றைச் செங்கல்லை கையில் வைத்து பாஜகவுக்கு எதிராக அவர் நடத்திய பிரசாரம் திமுகவிலேயே யாரும் எதிர்பார்க்காத பிரசாரம் என்று கூறப்படுகிறது.

மாமன்னன்: அதேபோல் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அவர் சட்டமன்ற உறுப்பினராக தீர்மான பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

விஜய்: தற்போது அரசியல் களத்தில் நடிகர் விஜய் களமிறங்கி உள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆனாலும் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் திமுக மீது விஜய் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார். இதில் ஒரு முறை பத்திரிகையாளர்களை நோக்கி எப்போதும் என்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே ஒரு முறையாவது விஜய்க்கும் வாய்ப்பு கொடுங்கள், அவரை நோக்கியும் கேள்வி கேளுங்கள் என்று கிண்டலாக தெரிவித்து இருந்தார். உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X