»   »  மீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்?

மீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒன்று கூடும் தனுஷ் சிவகார்த்திகேயன் அனிருத் ஜோடி!

சென்னை: தனுஷும், அனிருத்தும் மீண்டும் சேர்ந்து பணியாற்றப் போகிறார்கள்.

ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். தனுஷ், அனிருத் ஒரு படத்தில் சேர்ந்தால் பாடல்கள் கண்டிப்பாக ஹிட் என்ற அளவுக்கு இருந்தது.

அவர்கள் கூட்டணியை ரசிகர்கள் டி என் ஏ என்று அழைத்தனர்.

அனிருத்

அனிருத்

தனுஷ் ஒரு பக்கம் அனிருத்தையும், மறுபக்கம் சிவகார்த்திகேயனையும் வளர்த்துவிட்டார். திடீர் என்று சிவகார்த்திகேயன், அனிருத்தை பிரிந்து தனி வழியில் சென்றுவிட்டார் தனுஷ்.

ஏக்கம்

ஏக்கம்

தனுஷ், அனிருத் பிரிந்து சென்றது ரசிகர்களுக்கு கவலை அளித்தது. அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அனி

அனி

தனுஷை பிரிந்த பிறகு அனிருத் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்டார். அவர்களின் கூட்டணியும் வெற்றிக் கூட்டணியாகிவிட்டது. இருப்பினும் டி என் ஏ கூட்டணி மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

புகைப்படம்

புகைப்படம்

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மகன் திருமணத்தில் தனுஷும், அனிருத்தும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அதை பார்த்த ரசிகர்கள் அப்படியே படத்திலும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள்.

கூட்டணி

கூட்டணி

மீண்டும் தனுஷுடன் சேர்ந்து பணியாற்றப் போவதாக அனிருத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் அடுத்த ஆண்டு நடக்கும் என்று அனிருத் மேலும் தெரிவித்துள்ளார்.

English summary
Music direcor Anirudh said in an interview that DnA combo will be back in 2019. DnA stands for Dhanush and Anirudh. Fans are happy after hearing Anirudh's announcement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X