மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவிக்கு பதிலடி கொடுத்த ஜாய் கிரிஸில்டா.. சண்டை நாறுதே.. இதுவேறயா?
சென்னை: ஜாய் கிரிஸில்டா விவகாரத்தில் சமீபத்தில்தான் ஒரு முடிவு கிடைத்தது. இனிமேல் அவர்கள் தொடர்பான எந்தப் பிரச்னையும் இருக்காது என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் காட்டமாக இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருக்கிறார். அதற்கு தற்போது ஜாய் கிரிஸில்டா கடுமையான எதிர்வினையை கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களோ ஆஹா இவர்களுக்கிடையே மீண்டும் புது பிரச்னை கிளம்பிவிட்டதே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ்தான் கடந்த வருடத்தில் ஹெட்லைன்ஸாக இருந்தார். அவர் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமண மோசடி புகாரை கொடுத்தார். இருப்பினும் அவரது முதல் மனைவியான ஸ்ருதியோ தனது கணவருக்கு முழு ஆதரவையும் கொடுத்தது அனைவருக்குமே ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. குறிப்பாக, இதுபோன்ற பெண்கள் இருப்பதால்தான்; ஆண்கள் என்ன தவறு செய்தாலும் பரவாயில்லை என்று திமிரில் அலைகிறார்கள் என எக்கச்சக்கமாக போஸ்ட்டுகள் வந்தன. அவர் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

ரங்கராஜுக்கு துணையாக: மேலும், மகளிர் ஆணையத்தில் விசாரணையின்போது யாருமே எதிர்பார்க்காத விதமாக தனது கணவருடன் ஸ்ருதியும் வந்திருந்தார். அவர் அடிப்படையில் ஒரு வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக அந்த விசாரணையில்தான், டிஎன்ஏ டெஸ்ட்டில் நிரூபிக்கப்பட்டால் பிறந்திருக்கும் குழந்தையை ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறியிருந்தார். இதனையடுத்து நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு அந்த பரிசோதனையில் பங்கேற்றார். அதில் ரங்கராஜுக்குதான் அந்தக் குழந்தை பிறந்தது என்பது உறுதியானது.
புதிய பஞ்சாயத்து: இனிமேல் இந்த விஷயத்தில் எந்த பஞ்சாயத்தும் வராது என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். சூழல் இப்படி இருக்க ஜாய் கிரிஸில்டா சமீபத்தில், "டி.என்.ஏ டெஸ்ட் முடிவுகளுக்கு பிறகு என்ன நடந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இருக்கிறார் என்று கேட்கிறவர்களுக்கான அப்டேட் இதோ. மாதம்பட்டி ரங்கராஜ் மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக்கொண்டிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் அவருடன் இருப்பேன்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இன்று இன்னொரு போஸ்ட்டில், "எனது அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் எப்போதும் என்னை விட்டு போகமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார். அவர் உனக்காக வாழ்வேன், எதையும் எதிர்கொண்டு போராடுவேன், உனக்காக வாழ்ந்து உன்னை பெருமைப்பட வைப்பேன் என கூறினார்" என்று மகன் பேசுவது மாதிரியான கேப்ஷனை போட்டிருந்தார்.
`
ஸ்ருதியின் பதிவு: இந்தப் பதிவுகளை பார்த்து ஸ்ருதி காண்டாகியிருப்பார் போல. உடனே அவர் தன் பங்குக்கு, "எனது குடும்பத்தை தவறான குற்றச்சாட்டு மூலம் மிரட்டவோ, அவதூறு பரப்பவோ எந்த முயற்சிகள் நடந்தாலும் எனது குழந்தைகளையும், குடும்பத்தையும் பாதுகாப்பதற்கும், ஆதரிப்பதற்கும் நான் உறுதியாக இருப்பேன்" என குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படி போஸ்ட் சில மணி நேரத்திலேயே ஜாயும் ஒரு போஸ்ட்டை போட்டிருக்கிறார். குழந்தையின் கைகள் புகைப்படத்தை பகிர்ந்து, "தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்பவே முடியாது.
`
அறம் தவறி: நேர்மையாக இருப்பது அவதூறு கிடையாது. பொய் சொல்வது, ஏமாத்துவது, மாற்றி மாற்றி பேசுவது, அறம் தவறி நடப்பதுதான் குற்றம். அந்த பொய் புரட்டுக்கு துணை நிற்பது அவமானத்தின் அடையாளம். உங்கள் குடும்பத்தை இரட்டை முகம் கொண்ட மனிதர்களிடமிருந்தும், மிரட்டல்களிலிருந்தும் காப்பாற்றுங்கள். நீங்கள் யாரை ஆதரித்தாலும் பரவாயில்லை. நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. நீங்கள் தப்பிக்க முடியாது. உருட்டு, உருட்டு.. நன்றாக உருட்டு" என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்தப் பதிவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
