மகனுக்காக எவ்வளவோ போராடினேன்.. ஆனால் அவன்.. மகன் பற்றி மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஜாய் கிரிஸில்டா ஓபன்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம்தான் கடந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்தது. இன்றுவரை ஒரு முடிவுக்கு வரவே இல்லை அந்தப் பிரச்னை. அண்மையில்தான், டி.என்.ஏ பரிசோதனையில் பங்கேற்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சூழல் இப்படி இருக்க தனது மகனின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார் ஜாய். இந்நிலையில் தனது மகன் பற்றி ஒரு பேட்டியில் பூரிப்புடன் பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் ரகசியமாக நடந்த திருமணம் கடந்த வருடம் வெளியே வந்தது. தனது கணவர் தனக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்திருந்தாலும்; ஸ்ருதி முழு சப்போர்ட்டையும் மாதம்பட்டியாருக்கு வழங்கினார். ஜாய் கிரிஸில்டாவோ ரங்கராஜுக்கு எதிராக தீவிரமான சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் இதில் அமைதியாக இருந்த ரங்கராஜ்; தன்னை மிரட்டி திருமணம் செய்துவிட்டார் என்றும் ஒரு வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

டி.என்.ஏ டெஸ்ட்: மேலும் டி.என்.ஏ பரிசோதனையில் அந்த குழந்தை என்னுடையதுதான் என நிரூபிக்கப்பட்டால்; காலம் முழுவதும் அந்தப் பிள்ளையை பார்த்துக்கொள்ள தயார் என கூறினார். அப்படி கூறியவர் டி.என்.ஏ டெஸ்ட்டில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்துவந்தார். தன் பக்கம் உண்மை இருந்தால் இந்த பரிசோதனைக்கு வர வேண்டியதுதானே என பேச்சுக்கள் கிளம்பின. எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க சமீபத்தில், 'மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பங்கேற்பாரா மாதம்பட்டி: இப்போது விஜய் - சங்கீதா விவகாரம் எப்படி பெரிய பேசுபொருளாக இருக்கிறதோ அதேபோல்தான் இவ்விவகாரமும் இருந்தது. ஒருவழியாக கடந்த சில மாதங்களாகத்தான் இதுகுறித்த பேச்சுக்கள் எழாமல் இருந்தன. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால்; டி.என்.ஏ டெஸ்ட்டில் பங்கேற்கும் கட்டாயம் உருவாகியிருக்கிறது. எனவே ரிசல்ட் என்னவாக வரப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்.
மகனின் புகைப்படம்: இத்தனை நாட்கள் தனது மகனின் முகத்தை காண்பிக்காமல் இருந்தார் ஜாய். நேற்று தனது மகன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அது பயங்கர சென்சேஷனல் ஆனது. அப்படியே அப்பா மாதிரியே இருக்கிரான் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜாய் கிரிஸில்டா பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "எனது மகன் நன்றாக இருக்கிறார். அழகாக, சமத்தாக இருக்கிறார்.
அப்பா மாதிரிதான்: அவன் அப்படியே அவங்க அப்பா மாதம்பட்டி ரங்கராஜ்தான். நான் எங்கே தூக்கிக்கொண்டு போனாலும், குட்டி ரங்கராஜை தூக்கி வைத்தது மாதிரியே இருக்கிறது என சொல்வார்கள். முழுக்க முழுக்க அவன் சாயல்தான். அவனுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் அப்பா மாதிரியே இருப்பது எனக்கு பாசிட்டிவ்தான். இப்போது அவனுக்கு நான்கு மாதங்கள் ஆகின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications















