மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு.. ஜாய் கிரிசல்ட்டா கோரிக்கை ஏற்பு
சென்னை: நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தனது ஆண் குழந்தைக்கு அவர் தான் அப்பா என்றும் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் தான் அந்த குழந்தைக்கு அப்பா என்றால் குழந்தையின் பராமரிப்புச் செலவுகள் முழுவதையும் ஏற்பதாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக டி.என்.ஏ பரிசோதனைக்கு மாதம்பட்டி ரங்கராஜை வரச் சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சராமாரியான பதிவுகளை ஜாய் கிரிசல்ட்டா பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மரபணு பரிசோதனை நடத்துவதற்காக வழக்கறிஞர் ஆணையத்தை அமையத்தது. இரு தரப்பும் மரபணு சோதனைகளைச் செய்த பின்னர், அதன் முடிவுகளை மத்தியஸ்தரிடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உத்தரவு பிறப்பித்துளது. இந்த வழக்கில் இரு தரப்பிலுமே மரபணு பரிசோதனைக்கு நீதி மன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். இப்படி இருக்கையில் இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

புகார்: ஜாய் கிரிசல்டா கடந்த ஆண்டே மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார், இது மட்டும் இல்லாமல் எனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா. ஆனால் அவர் தற்போது அவரது முதல் மனைவியுடன் சென்று சேர்ந்து கொண்டு என்னை ஒதுக்குகிறார். நானும் மாதம்பட்டியும் திருமணம் செய்து கொண்டது, எல்லாம் அவரது முதல் மனைவி, மற்றும் அவரது பெற்றோர்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு: அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இருவரையும் விசாரித்தது. ஜாய் கிரிசல்ட்டாவும் தானும் மாதம்பட்டி ரங்கராஜும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்தும், வீடியோக்களைப் பகிர்ந்தும் வந்தார். இது பெரும் பேசுபொருளாகவே மாறியது. முதலில் அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்மந்தமில்லை, ஒருவேளை அந்த குழந்தைக்கு நான் தான் அப்பா என்றால், நான் அந்த குழந்தையின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று மாதம்பட்டி தரப்பில் அறிக்கை எல்லாம் வெளியானது. இப்படி இருக்கையில் தற்போது மரபணு சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











