DNA X Review: டிஎன்ஏ ட்விட்டர் விமர்சனம்.. அதர்வாவுக்கு அடித்தது யோகம்.. பராசக்திக்கு முன்னாடியே பக்கா படம்!
சென்னை: ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், பிக் பாஸ் ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிஎன்ஏ திரைப்படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நேற்று படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த பல பத்திரிகையாளர்களும் யூடியூப் விமர்சகர்களும் தங்கள் சமூக வலைதளங்களில் அதர்வாவுக்கு தரமான கம்பேக் படமாக டிஎன்ஏ உள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து சொதப்பினாலும், சிறிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து தியேட்டர் ஓனர்களையும் ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி விடுகின்றன. அந்த வரிசையில், கண்டிப்பாக இந்த வாரம் டிஎன்ஏ திரைப்படம் மாறும் என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர். அதர்வா படத்துக்கு சோஷியல் மீடியாவில் குவிந்து வரும் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
டிஎன்ஏ ட்விட்டர் விமர்சனம்: அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் இந்த வாரம் வெளியாகவுள்ள டிஎன்ஏ (DNA) திரைப்படம் ரொம்பவே க்ரிப்பிங் த்ரில்லராக இருப்பதாக விமர்சகர் ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதர்வாவுக்கு ஹீரோவாக பல ஆண்டுகள் கழித்து ஒரு தரமான படமாக இது இருக்கும் என்றுள்ளார். சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன் சாப்டர் 1 என தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து தமிழில் நடித்து வரும் நிமிஷா சஜயனுக்கு இது இன்னொரு வெற்றி மகுடம் என்றே சொல்லியிருக்கிறார். குழந்தையை பறிகொடுத்த தாயாக படம் முழுக்க அவர் நடுங்கும் காட்சிகளில் திரையரங்கே நடுங்குவதாக பதிவிட்டுள்ளார். படத்தில் இடம்பெறும் 2 பாடல்கள் மற்றுமே சற்றே வேகத்தடை என்றும் படத்தின் மைனஸ் அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார். 5க்கு அதிகபட்சமாக 3.75 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
கிளைமேக்ஸ் வேறல்வெல்: முதல் பாதி படம் சரியாக இருந்து விட்டு, இரண்டாம் பாதி படம் சொதப்பினாலே விமர்சகர்கள் படத்தை கழுவி ஊற்றி விடுவார்கள். ஆனால், பத்திரிகையாளர்களுக்கு தைரியமாகவே முதலிலேயே படத்தை டிஎன்ஏ படக்குழுவினருக்கு திரையிட்டு காண்பித்த நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. படத்தின் கிளைமேக்ஸ் தான் டாப் நாட்ச்சாக உள்ளதாக விமர்சகர் சித்தார்த் ஸ்ரீனிவாஸ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அதர்வாவுக்கு இந்த முறை வெற்றி உறுதி என்று பதிவிட்டுள்ளார்.
நிமிஷா சஜயனுக்கு விருதுகள் நிச்சயம்: "அடடா, அருமையான கதை, அழுத்தமான நடிப்பு, விறுவிறு சீன் கள், டிவிஸ்ட் தரமான கிளைமாக்ஸ். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வெற்றி படம். நிமிஷா சஜயனுக்கு விருதுகள் நிச்சயம். அதர்வாவுக்கு வெற்றி நிச்சயம்.படம் பார்ப்பவர்கள் கிளைமாக்சில் கை தட்டுவது நிச்சயம். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் சமூக பார்வை, திரைக்கதை, இயக்கத்துக்கு வாழ்த்துகள். டாடா வரிசையில் நல்ல படம் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் அம்பேத்குமார்" என மூத்த பத்திரிகையாளர் மீனாட்சி சுந்தரம் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

தனுஷ் படத்துக்கு டஃப்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள குபேரா படத்துக்கு செம டஃப் கொடுக்கப் போகிறது அதர்வாவின் டிஎன்ஏ என்கின்றனர். தனுஷ் மற்றும் அனிருத் காம்போவை தான் டிஎன்ஏ என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், டிஎன்ஏ படம் தற்போது தனுஷ் படத்துக்கு தலைவலியாக மாறுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். இரு படங்களும் நன்றாக இருந்தால், ரசிகர்களுக்குத்தான் மகிழ்ச்சி.


Click it and Unblock the Notifications











