twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிகாலை காட்சிகளால் சினிமா மவுசு குறையுதா?

    |

    சென்னை: இப்போதெல்லாம் சினிமா ரிலீஸ் அன்றைக்கு அதிகாலை காட்சிகள் என்று ஒன்று போடுவதால் சினிமாவின் மவுசு குறைந்து விட்டது என்று பேச்சு அடிபடுகிறது.

    கமல், ரஜினி, விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்பு அதிகாலைக் காட்சி என்று வெளியிடுவார்கள்.

    இதன் நோக்கம் என்ன என்று பார்த்தால் அந்த அதிகாலைக் காட்சிக்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமே காலை 5 மணிக்கே காத்திருந்து படத்தை பார்ப்பார்கள்.

    ஆஹா...ஓஹோ என்று

    ஆஹா...ஓஹோ என்று

    வெளியில் வந்து சமூக வலை தளத்தில் ஆஹா.. .ஓஹோ என்று படத்தைப் பாராட்டி பதிவு போட்டு விடுவார்கள். இந்த பதிவை பார்க்கும் மக்கள் குடும்பத்தோடு கூட படம் பார்க்க கிளம்புவார்கள்.

    அதிகாலைக் காட்சி

    அதிகாலைக் காட்சி

    இப்போது பெரும்பாலும் எல்லாப் படங்களுக்கும் இது போல அதிகாலைக் காட்சி போடுவது என்பது விதிகளை மீறிய செயல் என்றும், இதனால் படத்தின் மவுசு குறைந்து போவதாகவும் இன்டஸ்ட்ரியில் பேசிக் கொள்கிறார்கள்.

    கருத்தை கேட்க

    கருத்தை கேட்க

    இதற்கு முக்கிய காரணம் என்ன என்று பார்த்தால் ரசிகர்கள் அல்லாதவர்களும் வந்து அதிகாலை காட்சிகளைப் பார்க்க வருகிறார்கள். அதுவும் முக்கியமாக மக்களின் கருத்தை கேட்க மீடியாக்களும் இந்த நேரத்துக்கு வந்து படம் எப்படி என்று கேட்டு மக்களின் கருத்தை டிவியில் ஒளிபரப்பி விடுகிறார்களாம்.

    முதலில் பார்த்து

    முதலில் பார்த்து

    இதை எல்லாவற்றையும் விட சமூக வலைத் தளங்களில் பொழுதைப் போக்குகிறவர்கள் படம் எப்படி இருக்கு என்பதை முதலில் பார்த்து பதிவு போட்டு விட வேண்டும் என்றும் அதிகாலைக் காட்சிகளைப் பார்க்கிறார்களாம்.

    இதனால் சினிமாவுக்கு என்று ஒரு மவுசு இருப்பது குறைந்து வருகிறது என்பது இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களின் கருத்தும், கவலையும்....

    English summary
    Kamal, Rajini, Vijay, Ajith are the only actors who will be releasing early morning.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X