Don't Miss!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- News
"ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம்" நன்றி கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
லெஜெண்ட் அண்ணாச்சியை வைத்து அஜித்தை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்... துணிவு ஹீரோவுக்கா இந்த சோதனை?
சென்னை:
அஜித்தின்
துணிவு
திரைப்படம்
வரும்
பொங்கலுக்கு
திரையரங்குகளில்
வெளியாகிறது.
துணிவு
படத்திற்காக
விஜய்யின்
வாரிசு
திரைப்படமும்
பொங்கலுக்கு
ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில்,
லெஜெண்ட்
அண்ணாச்சியை
வைத்து
அஜித்தை
கலாய்த்து
ப்ளு
சட்டை
மாறனின்
ட்விட்டர்
பதிவு
வைரலாகி
வருகிறது.
இனிமே
அந்த
பிரச்சனையே
இருக்காது..
வாரிசு,
துணிவு
ரெண்டுமே
ரெட்
ஜெயண்ட்
கையில்
தான்..
எப்படி?

கோலிவுட்டில் யார் நம்பர் 1?
கோலிவுட்டில் எப்போதுமே ரசிகர்களிடம் அதிகம் விவாதத்தை ஏற்படுத்துவது யார் நம்பர் 1 நடிகர் என்பது தான். வரும் பொங்கலுக்கு வாரிசு, துணிவு படங்கள் வெளியாகவுள்ளதால், இப்போது விஜய் - அஜித் இருவரில் யார் டாப் என்ற விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இருதினங்களுக்கு முன்னர் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவே இந்த விவாதத்தை கிளப்பி விட்டார். விஜய் தான் நம்பர் 1 நடிகர், அதனால் வாரிசு படத்திற்கு தான் அதிகம் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என உதயநிதியிடம் கேட்கப் போவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இப்போது ப்ளு சட்டை மாறன் அஜித் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

அண்ணாச்சி தான் டாப்
ப்ளு சட்டை மாறன் டிவிட்டர் பதிவில், 2022ம் ஆண்டு வெளியான படங்களின் ட்ரெய்லர் வியூஸ் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், அண்ணாச்சியின் தி லெஜெண்ட் ட்ரெய்லர் 32 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. ஆனால், அஜித்தின் வலிமை ட்ரெய்லர் 25 மில்லியன் வியூஸ்களை மட்டுமே கடந்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார். மேலும், அண்ணாச்சியின் பவரை தப்பாக கணக்குப் போட வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அஜித்தை விடவும் அண்ணாச்சி தான் டாப் என ப்ளு சட்டை மாறன் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

கடுப்பான ரசிகர்கள்
விஜய் - அஜித் போட்டியில் அண்ணாசியையும் களத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார் ப்ளு சட்டை மாறன். இதனால் அஜித் ரசிகர்கள் ப்ளு சட்டை மாறன் மீது செம்ம கடுப்பில் உள்ளனர். சமீபத்தில் பனையூரில் ரசிகர்களை சந்தித்த விஜய்யையும் அவர் பயங்கரமாக விமர்சித்து இருந்தார். துணிவை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருப்பதாகவும், அதனால் பனையூரில் பிரியாணியுடன் ரசிகர்களை சந்திப்பதாகவும் ட்வீட் செய்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்களும் ப்ளு சட்டை மாறன் மீது கடுப்பில் இருந்தனர்.

வைரலாகும் டிவிட்டர் பதிவு
இந்நிலையில், தற்போது அஜித் பற்றி ப்ளு சட்டை மாறன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜெண்ட் அண்ணாச்சி, 'தி லெஜெண்ட்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து ஹீரோவாக நடிக்கவும் லெஜெண்ட் அண்ணாச்சி முடிவு செய்துள்ளார். அஜித்தின் வலிமை கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.