இனி இப்படி போட்டோ ஷூட் பண்ணுவ?: ‘அவனா நீ’ ரேஞ்சுக்கு ரன்வீர் சிங்கை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது,

'பேப்பர்' என்ற இதழுக்காக ரன்வீர் சிங் கொடுத்துள்ள நிர்வாண போஸ் அவரது ரசிகைகளிடம் வரவேற்பை பெற்றிருந்தது..

ஆனால், ரன்வீர் சிங்கின் இந்த நிர்வாண புகைப்படங்களை கையில் எடுத்த நெட்டிசன்கள் தற்போது தரமான சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

பாலிவுட்டில் இளம் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரன்வீர் சிங்கிற்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். இவரும் பாலிவுட் குயின் தீபிகா படுகோனேவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.. மிகச் சாதாரணமாகவே இவர்கள் இருவரது புகைப்படங்களும் இணையத்தை கலக்கும். இந்த நிலையில், ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அப்போ அவரு இப்போ இவரு!

அப்போ அவரு இப்போ இவரு!

பொதுவாகவே பிரபல பத்திரிகைகளுக்காக நடிகைகள் மட்டுமே ஆபாசமாகவும் நிர்வாணமாகவும் போட்டோ ஷூட் கொடுப்பது வழக்கம். நடிகர்களில் அரிதாக Burt Reynolds போன்று யாரேனும் சில நேரங்களில் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார்கள். இப்போது நானும் இருக்கிறேன் என்ற மைன்ட் வாய்ஸ்ஸுடன் ரன்வீர் சிங்கும் நிர்வாண போட்டோ ஷூட் வண்டியில் வாண்ட்டடாக ஏறியுள்ளார்.

கொண்டாட்டமும் திண்டாட்டமும்!

கொண்டாட்டமும் திண்டாட்டமும்!

நடிகைகளின் நிர்வாண போட்டோக்களை ஆண் ரசிகர்கள் கொண்டாடுவதைப் போல, இப்போது ரன்வீரின் நிர்வாண புகைப்படங்களை ரசிகைகளும் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் இந்த போட்டோ ஷூட் குறித்து பல விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவை எதையும் கண்கொள்ளாத ரன்வீர், "தன்னால் ஆயிரம் பேர் முன்னிலையில் கூட நிர்வாணமாக இருக்க முடியும்" எனக் கூறி விமர்சகர்களையே திண்டாட வைத்துவிட்டார்.

நெட்டிசன்களிடம் சிக்கிய ரன்வீர்!

நெட்டிசன்களிடம் சிக்கிய ரன்வீர்!

சும்மாவே யாராவது சிக்கிவிட்டால் வச்சு செய்யும் நெட்டிசன்களிடம், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இப்போது இருட்டுக் கடை அல்வா போன்று கையில் கிடைத்துள்ளது. "இதுக்கு மேல நாங்க பார்த்துக் கொள்கிறோம்" என்ற மைண்ட் வாய்ஸோடு ரன்வீரை வெரைட்டி வெரைட்டியாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஆதம் முதல் கரப்பான் பூச்சி வரை...

ஆதம் முதல் கரப்பான் பூச்சி வரை...

மிகவும் புகழ்பெற்ற ஆதமின் நிர்வாண ஓவியத்தோடு ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோவை ஒப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், "இது ரன்வீர் கிரியேஷன்' என ட்ரோல் செய்துள்ளார்.

போதும் முடியலங்ண்ணா!

போதும் முடியலங்ண்ணா!

சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி போன்றும், ஆதிமனிதன் என இன்னும் விதவிதமாக ரன்வீரின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தை ரவுண்டு கட்டி வருகின்றன. நெட்டிசன்களே போதும் விட்டுவிடலாம் என்ற வகையில் ரன்வீர் சிங் ட்ரோல் செய்யப்படுவது, பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X