Director shankar:என்னங்க சொல்றீங்க...இயக்குநர் ஷங்கர் கார்ப்பரேட் கம்பெனி நடத்தறாரா?
சென்னை: பிரமாண்ட பட்ஜெட் படங்களின் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படம் பண்ண ஒரு கார்ப்பரேட் கம்பெனியே நடத்தி வருகிறார் என்று சொல்கிறார்கள்.
ஒரு கார்ட்பரேட் ஆஃபீஸ் மாதிரி 40 கம்ப்யூட்டர் இன்ஜுனியரிங் படித்த ஆட்களை வச்சு,மாத சம்பளத்துக்கு கடந்த ஒரு வருஷமா உட்கார வச்சு வேலை பார்த்துக்கிட்டு வர்றாங்க.
இதனால் படம் ஷூட்டிங் நடக்குமா நடக்காதா என்கிற நிலையில், இனியும் சம்பளம் கொடுக்க மனமில்லாத லைக்கா நிறுவனம் ஷங்கர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.

இந்தியன் பார்ட் 2
முதல்வன் படத்துக்கும் பேசியாச்சு..இனியும் இந்தியன் 2 ன்னு சொல்லிக்கிட்டு, பணம் வாங்கறது அவ்வளவுக்கு நல்லா இல்லைன்னு லைக்கா மறைமுகமா சொல்லிப் பார்த்துருச்சாம். இனி நேரடியாவே கேட்டுடறதுன்னு முடிவிலும் இருக்குத்தாம் லைக்கா நிறுவனம். முதல்வன் பார்ட் 2 எடுக்க ஷங்கர் தயாராகி வருவதும், அதற்கான தயாரிப்பை சன் டிவி ஏற்றுக்கொண்டதும் மக்களுக்கே அரசல் புரசலாக தெரிந்து இருக்கும்போது, லைக்கா நிறுவனத்துக்கு தெரியாதா என்ன?

முதல்வனுக்கு உருவி
இத்தனை மாதங்கள் கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி, இந்தியன் பார்ட் 2 வுக்கு பார்த்த வேலைகள் என்ன எனபதும், அவர் கம்ப்யூட்டர் கிராபிக்சில் என்னென்ன செய்து வைத்து இருக்கிறார் என்பதும் ஷங்கருக்கும் அதில் வேலை பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புரியும். அதை லைக்கா நிறுவனம் வாங்கி எந்த பிரயோஜனமும் இல்லை. வேலைகள் அனைத்தையும் முதல்வன் பார்ட் 2 வுக்கு பயன்படுத்திக்குவாரோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

இளைஞர் கமலுக்கு
இந்தியன் பார்ட் 2 வுக்கு இளைஞர் கமல் ஹாசனுக்கு என்னென்ன செட்டப், கதை என்று எல்லாம் செய்திருந்தார்களோ, அதை எல்லாம் முதல்வன் பார்ட் 2 வுக்கு பயன்படுத்திக்குவார் என்று இன்டஸ்ட்ரியில் பேச்சு வந்திருச்சு. அப்படி செய்தாலும், லைக்கா நிறுவனத்துக்கு எதுவும் தெரியப் போவதில்லை என்றும் பேசிக்கறாங்க.

வாழ்க்கை நம்பிக்கை
ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சு இருக்கும் நம்பிக்கையில்தான் மனிதர்கள் வாழ்க்கை சக்கரம் இனிதாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்டஸ்ட்ரியில் பேசிக்கற மாதிரி ஷங்கர் லைக்கா நிறுவனத்துக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் சரி, இவரும் 23ம் புலிகேசி படத்தில் சிறிய அளவில் பணம் போட்டு விட்டு, வடிவேலுவால் மன உளைச்சலில் இருப்பதாக கூறிக்கொண்டு இருப்பதும் உண்மைதானே... இன்னும் மற்றவரின் வலி தெரியாது?


Click it and Unblock the Notifications











