Shalini Net worth: அப்பப்பா.. அஜித் மனைவி ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினியின் சொத்து குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை ஷாலினி.

இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அவர் நடித்த அனைத்துப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.
நடிகை ஷாலினி: காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே என பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் ஷாலினி. அஜித்துடன் இணைந்த அமர்க்களம் படம் இந்த அட்டகாசமான ஜோடியின் காதலுக்கு விதை போட்டது. இதையடுத்து, 2000 ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இந்த ஜோடி, திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம்: இதையடுத்து சினிமாவில் இருந்து விலகி ஷாலினிக்கு எட்டு ஆண்டுகளுக்கு பின் அனோஷ்கா என்கிற மகள் பிறந்தார். அனோஷ்காவிற்கு தற்போது 15 வயதாகிறது. ஆனால் பார்ப்பதற்கு தன்னுடைய தந்தை போலவே உயரமாகவும், அம்மாவையே பீட் பண்ணும் அழகிலும் சும்மா சினிமா ஹீரோயின் போல் ஜொலிக்கிறார். சமீப காலமாக அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரின் புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது.
இன்று பிறந்தநாள்: இந்நிலையில் ஷாலினி இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் இந்த நேரத்தில் அவரின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஷாலினிக்கு சொந்தமாக ரூ.50 கோடிக்கு சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.
மொத்த சொத்து: ஷாலினி சிறுவயதில் இருந்த சினிமாவில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சினிமாவில் கடைசியாக கதாநாயகியாக நடித்த போது ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை ஷாலினியின் கணவர் அஜித்குமார், தமிழ் சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் ஒரு படத்தில் 130 சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











