Parthiban Birthday: வித்தியாச விரும்பி பார்த்திபனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் இன்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபனை ஒரு வித்தியாச விரும்பி என்றே சொல்லலாம். எந்த விஷயத்திலும் வித்தியாசத்தை புகுத்தி அதில் அழகு சேர்த்து அதை நயன்பட சொல்வதில் அவருக்கு நிகர் அவரே.

புதிய பாதையில் தொடங்கிய இவரது பயணம் இரவின்நிழல் வரை நீண்டுக்கொண்டே செல்கிறது.
இயக்குநர் பார்த்திபன்: மனுஷன் என்னமா யோசிக்கிறாருய்யா என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசம். ஒத்த செருப்பு படத்தில் படம் முழுவதும் தனி ஒருவராக திரையில் தோன்றி ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்து அதில் வெற்றியும் கண்டார். இத்திரைப்படம் இரு தேசிய விருதை தட்டிச் சென்றது.
பல விருதுகள் இரவின் நிழல்: இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட்டில் மொத்த திரைப்படத்தையும் இயக்கி சுமார் 100க்கும் மேற்பட்ட விருதுகளையும் பாராட்டையும் பெற்றார். மேலும், இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயாவா தூயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு: இந்நிலையில், இன்று 65வது பிறந்த நாளை கொண்டாடிவரும் பார்த்திபனுக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம். இதுவரை 15 படங்களை இயக்கி சுமார் 50 படத்திற்கும் மேல் நடித்துள்ள இவர், சுமார் 30 முதல் 40 கோடிகள் வரை சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு: இவருக்கு சென்னை திருவான்மியூரில் பிரம்மாண்ட வீட்டில் வசித்து வருகிறார். இதன் மதிப்பு 9 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வீட்டின் ஒரு பகுதியை தான் அலுவலகமாகவும் மாற்றி பயன்படுத்தி வருகிறார். பார்த்திபனுக்கு சென்னை கேகேநகரில் பங்களா ஒன்று இருந்தது, ஆனால் அது ஒருகட்டத்தில் விற்க வேண்டிய நிலை வந்ததால் விற்றுவிட்டார்.
பார்த்திபன் சம்பளம்: இவர் நடிகராக ஒரு படத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குகிறார். மேலும், இயக்குநராகவும், புத்தகம் எழுதுவதன் மூலமாகவும் ஒரு குறிப்பிட்ட வருமானம் இவருக்கு வருகிறது. இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இவருக்கு கணிசமான வருமானம் வருகிறது. நான்கு சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











