ரகசிய திருமணம் செய்து கொண்ட சித்தார்த்.. அதிதி ராவின் முதல் கணவர் யார் தெரியுமா?

சென்னை: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இன்று இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதிதி ராவின் முதல் கணவர் குறித்தும், சித்தார்த்தின் முதல் மனைவி குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். இந்த படத்தைத் தொடர்ந்து சைக்கோ, செக்க சிவந்த வானம், ஹாய் சனாமிக்கா என அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார்.

Do you know actress aditi rao hydari first husband

நடிகை அதிதி ராவ்: தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பலத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அதிதி ராவ், சித்தார்த்துடன் இணைந்து மஹாசமுத்திரம் படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே, இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரே காரில் ஜோடியாக சென்றனர். சினிமா விழாக்கள், திருமண வீடு, பார்ட்டி என அனைத்திற்கும் இருவரும் ஜோடியாகவே வலம் வந்ததால் இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

ரகசிய திருமணம்: அதே போல சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை அவ்வப்போது ஷேர் செய்து, காதல் மழை மொழிந்து வந்தார். இருப்பினும் இருவரும் காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு இருவரும் பதில் அளிக்காமல் மௌனமாகவே இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று இருவரும், தெலங்கானா மாநிலம், வனபர்தி மாவட்டம், ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோவிலில் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக டோலிவுட் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Do you know actress aditi rao hydari first husband

இரண்டாம் திருமணம்: சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவருக்குமே இது இரண்டாம் திருமணமாகும். நடிகை அதிதி ராவ் தனது 21 வயதிலேயே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து, அதிதி ராவின் முதல் கணவர், சத்யதீப் மிஷ்ரா, மசாபா குப்தா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் நடிகை குப்தாவின் ஒரே மகள் தான் மசாபா இவர், பாலிவுட் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார்.

சித்தார்த்தின் முதல் மனைவி: அதே போல நடிகர் சித்தார்த்திற்கு 2003ம் ஆண்டு மேக்னா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மனைவியை பிரிந்த சித்தார்த் பல ஆண்டுகளாக தனியாக இருந்த நிலையில் தற்போது அதிதி ராவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் அவர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X