Meena net worth: கண்ணழகி மீனாவின் சொத்து மதிப்பு.. மிரள வைக்கும் பேங்க் பேலன்ஸ்!
சென்னை: சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நடிகை மீனா இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துருதுரு குழந்தையாக இருந்த மீனாவை, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், திருமணவிழாவில் பார்த்தார்.

க்யூட்டா அழகு தேவதைப்போல இருந்த மீனாவை பார்த்ததும் சிவாஜிக்கு மனதில் பொறிதட்ட நெஞ்சங்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் மீனாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
ரஜினி அங்கிள்: இந்த படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுக்கு அடையாளம் கொடுத்த படம் தான் அன்புள்ள ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினி அங்கிள் என சூப்பர்ஸ்டார் மீது அலாதி பிரியம் கொண்ட குட்டி ரசிகையாகவே நடித்து அசத்தி இருந்தார் மீனா.
என் ராசாவின் மனசிலே: இப்படி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்த மீனாவை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது நடிகர் ராஜ்கிரண் தான். இதையடுத்து, என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மா என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் மீனா. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடிதது.

கொடி கட்டி பறந்த மீனா: இதன்பின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த மீனா, எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு மீனா மற்றும் ரஜினி இடையேயான கெமிஸ்ட்ரியும் முக்கிய காரணமாக இருந்தது.
கணவர் இறந்தார்: கடந்த ஆண்டு, மீனாவின் கணவர் வித்யா சாகருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கணவர் நினைப்பில் இருந்து மீள முடியாத துயரத்தில் இருந்த மீனா மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டுள்ளார். தற்போது இவர் ஜெய ஜோஸ் ராஜ் என்ற மலையாள இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு: இந்நிலையில் இன்று 46வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை மீனாவின் சொத்து மற்றும் பேங்க் பேலன்ஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகர், ஒரு பெரிய நிறுவனத்தில் இன்ஜினியராக இருந்தார். அவருக்கு மாத சம்பளமே 3 அல்லது 4 லட்சம் இருக்கும். நிச்சயம் இறந்துவிடுவோம் என்று தெரிந்து கொண்ட வித்யாசாகர் தனது சொத்துக்களை மீனா மற்றும் மகள் மீது எழுதி வைத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் மீனாவும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்ததால், அந்த பணத்தை அப்படியே பேங்க்கில் டெபாசிட் செய்துள்ளார். இதனால், அவரின் பேங்க் பேலன்ஸ் பல கோடி இருக்கும் என்றும், அவரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 35 கோடியில் இருந்து 40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications