நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வாயை பிளக்க வைக்கும் பேங்க் பேலன்ஸ்!

சென்னை: சினிமா, சீரியல், அரசியல் என அனைத்திலும் கலக்கி வருபவர் ராதிகா சரத்குமார். எத்தக்கருத்தையும் துணிச்சலுடன் கூறும் தில் இவருக்கு உண்டு இதனால் சினிமா வட்டாரத்தில் இவருக்கு என்று தனி மதிப்பு உண்டு.

கதாநாயகி, குணசித்திரம், அம்மா கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுத்து விடுவார் ராதிகா, நடிக்க தொடங்கிய நாள் முதல் இன்று வரை வெற்றி நாயகியாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

Do you know actress radhika Sarathkumar net worth assets

இன்று 61வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்க்கலாம்.

நடிகை ராதிகா சரத்குமார்: இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில், மாநிறத்தில், தமிழை கொஞ்சி கொஞ்சி பேசி அனைவரையும் வசியம் செய்தவர் ராதிகா. இன்று வரை இவர் நடித்த அந்த பாஞ்சாலி கதாபாத்திரம் பேசும் பொருளாகவே உள்ளது. நடிகர் சுதாகருடன் இவர் நடித்த இந்த படம் வெற்றி பெற்று ஹிட்டடித்து ராதிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Do you know actress radhika Sarathkumar net worth assets

முன்னணி நடிகை: முதல் படமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகையாக மாறிய ராதிகாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தன. நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவர் நடித்த அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன. ரஜினி , கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

அசத்தலான நடிப்பு: இவரது நடிப்பில் வெளியான கிழக்கு சீமையிலே இன்னொரு பாச மலர் படம் என்றே கூறப்பட்டது. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பாசமிகு தங்கையாகவும், அமைதியான மனைவியாகவும், பாசம், கோபம் என அனைத்து காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருப்பார். இந்த படம் வெற்றி பெற்று இவரின் ரேஞ்சை மேலும் அதிகரித்தது.

Do you know actress radhika Sarathkumar net worth assets

பெரிய சாதனை: கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையை ராதிகா நிகழ்த்தி வருகிறார். தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பாலிவுட் வரை தனது கொடியை நாட்டி அதை விசாலமாக பறக்கவும் விட்டுள்ளார் ராதிகா. விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, அருண்குமார் என பல டாப் நடிகர்களுக்கு அம்மாவாக தற்போது வரை நடித்து வருகிறார்.

கோடிக்கணக்கில் சொத்து: இன்று 61வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ராதிகா சரத்குமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரின் சொத்து குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. கார் விரும்பியான ராதிகா, range rover, வெள்ளை நிற audi கார், benz e class, Nissan XUV,Pajeri sport car, சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வைத்து இருக்கிறார்.

Do you know actress radhika Sarathkumar net worth assets

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ராதிகா படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் கோடிக்கணக்கில் பேக்ங் பேலன்ஸ் வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, அவரின் சொத்து மதிப்பு ரூ. 100 - 120 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X