Aishwarya Rai: அம்மாடியோ.. கோடிகளை தாண்டும் நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராயின் 50வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய். 1994 ஆம் ஆண்டு தனது 21 வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றார்.

Do you know Aishwarya Rai Bachchan net worth and property value

அதன் பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்த இவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து இன்று வரை டாப் நடிகையாகவே இருக்கிறார்.

உலக அழகி நான் தான்: ஐஸ்வர்யா ராயின் வனப்பு, நிறம் சொக்கவைக்கும் அழகு சினிமாவில் அவரை உச்சம் தொடவைத்தது. அழகு இருந்தால் நிச்சயம் ஆபத்து இருக்கும், அதுவும் நடிகையாகி விட்டால், எளிதாக அவரை ஆபத்தும், சர்ச்சையும் சூழ்ந்து விடும் அப்படி அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கி துவண்டு போனார் ஐஸ்வர்யா ராய்.

காதல் திருமணம்: இதையடுத்து,2007ம் ஆண்டு பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். 50 வயது ஆன போதும் அதே அழகு அதே வனப்புடன் இருக்கும் ஐஸ்வர்யா ராய், அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரண்டு விதமான கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருந்தார்.

50வது பிறந்த நாள்: இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், உலக அழகியாக நம்மை ஆட்டிப்படைத்து வரும் ஐஸ்வர்யா ராயின் சொத்து குறித்த தகவலைப் பார்க்கலாம்.

சொத்து மதிப்பு: கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நடிகையாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 776 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, இந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், மும்பையில் ரூ.112 கோடி மதிப்புடைய பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும், ஒரு படத்தில் ரூ. 10 கோடி முதல் 12 கோடியும், விளம்பரத்திற்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X