Aishwarya Rajinikanth: கோடியில் புரளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 18 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்து வந்த இவர்கள், இரண்டு ஆண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில், ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது மகன்களுடன் ரஜினிவீட்டில் வசித்து வருகிறார்.

Do you know Aishwarya Rajinikanth assets and salary

தனுசை பிரிந்ததால் மன அழுத்தத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளார். இந்த வயதில் கணவரை பிரிந்து வாழ்வது பெரிய துயரமான ஒன்றாக இருந்தாலும் மகளுக்கு பக்க பலமாக அப்பா ரஜினியும், அம்மா லதாவும் இருக்கிறார்கள். அதே போல தனுஷின் மகன் யாத்ரா இந்த சிறு வயதிலேயே அப்பா,அம்மாவின் மனநிலையை புரிந்து கொண்டு இருவர் இடத்திலும் சமமான அன்பை பொழிந்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: தனுஷூடனான பிரிவால் வருத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா தனது கவனத்தை மாற்ற முயற்சி செய்து பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு,இந்தியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே, தனது கணவரை வைத்து த்ரி என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக ஒய் திஸ் கொல வெரி பாடல் உலக அளவில் பிரபலமானது. அண்மையில் ரீ ரிலீஸான த்ரி படத்திற்கு எதிர்பார்த்தை விட ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

லால் சலாம்: த்ரி படத்தைத் தொடர்ந்து வை ராஜா வை இயக்கி ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி உள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமா வைத்து உருவாகி வரும் இப்படத்தில், விஷ்ணு விஷால்,விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். தனது மகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தின் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

மொத்த சொத்துமதிப்பு: இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் இணையத்தின் வழியாக பிறந்த நாள் வாழ்த்து கூறிவருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஐஸ்வர்யாவின் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஐஸ்வர்யாவிற்கு ரூ.40 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இவருக்கு சொந்தமாக ஒரு சொகுசு வீடும், தங்க, வைர நகைகளை வைத்துள்ளார். அதன் மதிப்பே கோடிக்கணக்கில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X