Anushka shetty net worth: தேவசேனாவாக கலக்கிய அனுஷ்கா ஷெட்டியின் முழு சொத்து மதிப்பு!

சென்னை: நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாதவன் நடித்த இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் அனுஷ்கா.

இதையடுத்து ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

do you know anushka shetty net worth and salary

நடிகை அனுஷ்கா ஷெட்டி: தெலுங்கு திரையுலகில் அருந்ததி, தேவசேனா வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக உடல் எடை கூடி குண்டாக மாறினார். ஆனால், அதன்பின் உடல் எடை குறையாததால் பல படவாய்ப்புகளை இழந்தார்.

தென்னிந்திய குயின்: டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை ஈர்த்து தென்னிந்திய சினிமாவின் குயின் எனக் கொண்டாடப்படும் நடிகை அனுஷ்காவின் நடிப்பில் கடைசியாக நிசப்தம் என்ற படம் வெளியானது. தற்போது இவர், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

சொத்துமதிப்பு: இன்று 42வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவரின் சொத்து மற்றும் சம்பளத்தை பற்றி தெரிந்து கொள்வோம். 16 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் அனுஷ்கா ஷெட்டி ஒரு படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடியை சம்பளமாக வாங்குகிறார். பாகுபலி படத்திற்கு பிறகுதான் இவரின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 130 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படும் சொத்து மதிப்பு இதுதான்.

யோக ஆசிரியர்: ஹைதராபாத்தில் யோகா ஆசிரியராக இருந்த அனுஷ்கா கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் நாகர்ஜூனா தான் ஹீரோ. அனுஷ்கா, நாகர்ஜூனாவுக்கு யோகா ஆசிரியராக இருந்தார் என்றும் அதன் மூலமாகவே அவருக்குப் பட வாய்ப்பு கிடைத்தது என்றும் ஒரு கதை உண்டு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X