ரஜினிக்கு ஸ்ரீதேவி அம்மாவாக நடித்த படம் தெரியுமா?.. அவருக்கு 13 வயது.. சூப்பர் ஸ்டாருக்கு 31 வயது
சென்னை: நடிகை ஸ்ரீதேவி தென்னிந்தியாவிலிருந்து பான் இந்தியா அளவுக்கு வளர்ந்து கொடியை பறக்கவிட்ட நடிகைகளில் ஒருவர். ரஜினி, கமல் தொடங்கி பாலிவுட் ஸ்டார்கள்வரை அத்தனை பேருடனும் ஜோடி போட்டு நடித்த அவர் கடந்த ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் தனக்கு 13 வயது இருக்கும்போதே ரஜினிகாந்த்துக்கு அம்மாவாக நடித்து கலக்கியிருக்கிறார் ஸ்ரீதேவி.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். எம்ஜிஆர் உள்ளிட்டோருடன் நடித்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோயினாக மாறினார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவி வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். 16 வயதினிலே, ஜானி, குரு என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து தனக்கான தனியிடத்தை பிடித்தார் அவர்.
மற்ற மொழிகளிலும்: தமிழில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழிகளிலும் தனக்கான மார்க்கெட்டை உயர்த்தினார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தார். அங்கும் தனது திறமையை காண்பித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக மாறினார். அவரோடு எப்படியாவது நடித்துவிட வேண்டும் என பாலிவுட் ஹீரோக்கள் பலரும் தவம் இருந்தார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அவரது மவுசு அங்கே எப்படி இருந்தது என்பதை.

போனி கபூருடன் திருமணம்: பாலிவுட்டில் பிஸியாக இருந்தபோது தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். போனிக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி ஆவார். இருந்தாலும் அவர்களது திருமண வாழ்க்கை எந்த சச்சரவும் இல்லாமல் சுமூகமாகவே போனது. அதேசமயம் ஏகப்பட்ட ஆடம்பர செலவுகளை செய்து கணவரை நெருக்கடிக்கு ஆளாக்கினார் என்ற விமர்சனமும் நீண்ட காலம் இருந்தது. சூழல் இப்படி இருக்க கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
ரஜினிக்கு அம்மா: இந்நிலையில் தனது 13 வயதிலேயே ரஜினிக்கு ஸ்ரீதேவி அம்மாவாக நடித்தது பற்றி பார்க்கலாம். அதாவது அவர் ஹீரோயினாக அறிமுகமான படம் மூன்று முடிச்சு. அந்தப் படத்தை கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவானாலும் அப்படியே ரீமேக் செய்யவில்லை KB. அதில் புதுமையாக பல விஷயங்களை சேர்த்திருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்திருப்பார்கள்.
எப்படி அம்மா?: இந்தப் படத்தில் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் காதலிப்பார்கள். அதேசமயம் ஸ்ரீதேவி மீது ரஜினிக்கு ஒரு கண் இருக்கும். படகில் மூன்று பேரும் சேர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது ஆற்றில் கமல் விழுந்துவிட நீச்சல் தெரிந்த ரஜினி காப்பாற்ற மறுத்துவிடுவார். இதனால் கமல் உயிரிழந்துவிடுவார். அவர் உயிரிழந்ததை ஒரு வாய்ப்பாக கருதி ஸ்ரீதேவியை எப்படியாவது அடைந்துவிடலாம் என்று நினைப்பார். கமலின் இறப்பை அடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ரஜினி வற்புறுத்த அதை ஸ்ரீதேவி மறுத்துவருவார்.
ஸ்ரீதேவி அடித்த ட்விஸ்ட்: ஒருகட்டத்தில் ரஜினியிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க; ரஜினியின் தந்தை விஸ்வநாதன் கொடுத்த இரண்டாவது திருமணம் பற்றிய செய்தியை தெரிந்துகொண்டு விஸ்வநாதனை திருமணம் செய்துகொள்வார் ஸ்ரீதேவி. இதற்கிடையே மேனகா என்ற கதாபாத்திரத்தை கர்ப்பமும் ஆக்கியிருப்பார் ரஜினிகாந்த். விஸ்வநாதனை திருமணம் செய்துகொண்டதால் தற்போது ஸ்ரீதேவி ரஜினிக்கு தாய் ஸ்தானமாக மாறியிருப்பார். இது மேற்கொண்டு அசௌகரியத்தை ரஜினிக்கு கொடுத்துவிட; தான் கர்ப்பமாக்கிய மேனகா என்ற கதாபாத்திரத்தையே ரஜினி திருமணம் செய்துகொள்ளும் நிலைமை வந்துவிடும். இந்தப் படத்தில் நடித்தபோது ரஜினிக்கு வயது 31 என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











