பல சொகுசு பங்களா.. கோடி கணக்கில் பேங்க் பேலன்ஸ்.. அக்ஷய் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மும்பை: நடிகர் அக்ஷய் குமார் பாலிவுட் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோவாக கலக்கி வரும் இன்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

பஞ்சாபில் அமிர்தசரசில் பஞ்சாபிய குடும்பத்தில் பிறந்த அக்ஷய் குமாரின் இயற்பெயர் ராஜிவ் ஹரி ஓம் பாதியா. சினிமாவிற்கான தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

Do you know bollywood actor Akshay Kumar net worth

1991ல் சௌகான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அக்ஷய் குமார், அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மை கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து மாஸ் ஹீரோ என பெயர் எடுத்தார்.

நடிகர் ஆக்ஷய் குமார்: நடிகர் ஆக்ஷய் குமார், அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை கதாபாத்திரம் என நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படத்தில் வில்லனாக பக்‌ஷிராஜன் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

சர்ச்சைக்குள்ளான படம்: அக்‌ஷய் குமாரின் நடிப்பில் கடைசியாக ஓஎம்ஜி 2 படம் வெளியானது. பாலியல் கல்வி தொடர்பான இந்தப் படத்தில் இந்து கடவுள்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி இந்த படத்துக்கு சில வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தை திரையிடக்கூடாது என கூறி தியேட்டரில் அக்‌ஷய் குமாரின் உருவ பொம்மையை எரித்தனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெயரை மாற்றினார்: தற்போது நடிகர் அக்‌ஷய் குமார், மிஷன் ராணிகன்: தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ என்ற படம் அக்டோபர் வெளியாக உள்ளது. ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்க விபத்தை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இப்படத்தின் பெயரை நடிகர் அக்ஷய் குமார், மிஷன் ராணிகன்: தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று பிறந்தநாள்: 56 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் அக்‌ஷய் குமாரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.742 கோடி என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரின் ஆண்டு வருமானம் மட்டும், ரூ.80 கோடி என்றும், படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் 40 கோடி எனவும், விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் பல கோடி வருமானம் வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

4 சொகுசு வீடுகள்: ரியல் எஸ்டேட்டில் தனது பணத்தை முதலீடு செய்துள்ள அக்ஷய் குமார், மும்பை ஜூஹூவில் கடல் நோக்கிய டூப்ளெக்ஸில் வசிக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.7.8 கோடி இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீட்டை தவிர மும்பையில் அவருக்கு மேலும் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X