ஆண்டுக்கு ரூ.60 கோடி வருமானம்.. தலையை சுற்ற வைக்கும் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு!
மும்பை: பிக் பீ, மற்றும் ஷாஹேந்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இன்று தனது 81வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன்.
திவார், சன்சீர், சோலே மற்றும் மிஸ்டர் நட்வர்லால் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

81வது பிறந்த நாள்: அமிதாப் பச்சனுக்கு 81 வயதாகிவிட்ட போதிலும் எப்போதும் துடிப்புடனும், இளமையுடனே காணப்படுகிறார். பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகங்களை கொண்டு வருகிறார். தற்போதும் இன்னும் ஏராளமான விளம்பரங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வரும் அமிதாப் பச்சனின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கோடி கணக்கில் சொத்து: ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் அமிதாப்பச்சன் ஒரு வருடத்திற்கு 60 கோடி சம்பாதிக்கிறார் என்றும் அவரது மொத்த சொத்து மதிப்பு 3396 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்காக ஐந்து கோடி ரூபாயை சம்பளமாக பெருகிறார்.
மும்பையில் பல வீடுகள்: ரியல் எஸ்டேட் தொழில், ஸ்டார்ட்அப் தொழில் நிலையிலும் அவர் பணத்தை முதலீடு செய்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு மும்பையில் நான்கு பங்களாக்கள் உள்ளன. முல்சா, ஜனக், பிரதிக்ஷா, வாட்ஸ் ஆகிய இடங்களில் பங்களாக்கள் உள்ளன. மும்பையின் ஜூஹு பகுதியில் அமைந்துள்ள ஜல்சாவில் உள்ள பங்களாவில் அமிதாப்பச்சன் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். இந்த பங்களாவின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது.

தனி ஜெட் விமானம்: லெக்ஸஸ், ரோல்ஸ் ராயல் பாண்டம், 2 பிஎம்டபிள்யூ, 3 மெர்சிடிஸ் என சொந்தமாக மொத்தம் 11 சொகுசு கார்களும், ரூ.260 கோடி ரூபாயில் தனியார் ஜெட் விமானத்தையும் வைத்து இருக்கும் அமிதாப் பச்சன் 81 வயதான போதிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications