ஓடிடியில் வெளியானது ராயன்.. ஒட்டுமொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: தனுஷின் 50வது படம் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன் படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளிய நிலையில் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் தனுஷூடன் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்து இருந்தனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனுஷ் மிகவும் வித்தியாசமானவர். கோலிவுட் , பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தி உள்ளார். ஹாலிவுட்டில் இவர் நடித்த கிரேமேன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் தனது ரசிகர்களால் கொண்டாடப்படும் தனுஷ் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என பலத்திறமையுடன் மாஸ் காட்டி வருகிறார்.

Dhanush Raayan OTT

ராயன்: பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது 50வது படமாக 'ராயன்' படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். கடந்த ஜூலை 26-ம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் தனுஷ் கேரியரில் பல சாதனைகளை நிகழ்த்தியது. ஐந்தே நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த இப்படம் ஒட்டு மொத்தமாக உலகளவில் 155 கோடி வசூல் செய்தது. இதன்மூலம் தனுஷ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் எனும் மகத்தான சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.

ஓடிடியில்: இந்த ஆண்டு தமிழில் அதிக வசூல் செய்த படம் எனும் பெயரையும் ராயன் பெற்றுள்ளது. இப்படி தியேட்டரில் நன்றாக கல்லாக் கட்டிய இத்திரைப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் ஏஆர் ரஹ்மானின் இசையில் உருவான இப்படத்தில் வாட்டர் பாக்கெட் மூஞ்சு பாடலும், உசுரே நீ தான் என்ற பாடலும் யூடியூப்பில் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்து வருகிறது. தற்போது ராயன் பாடல் ஓடிடியில் வெளியாகி உள்ளதால், ஓடிடியிலும் இப்படம் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X