twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துணை இயக்குநர்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிய அஜித்... இப்போது அவர்கள் இயக்குநர்கள் தெரியுமா?

    |

    சென்னை: பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் தங்களை பொது சேவையில் ஈடுபடுத்திக் கொள்வார்கள். அது பண உதவியாகவும் இருக்கும், கல்வி உதவியாகவும் இருக்கும். இல்லை மறைந்த விவேக் அவர்கள் செய்தது போல மரம் வளர்ப்பதாகவும் இருக்கும்.

    தமிழ் சினிமா பொருத்தவரை எம்.ஜி.ஆர், விஜயகாந்த், நடிகர் சிவக்குமார் குடும்பம் செய்யும் உதவிகள் பெரிதும் பேசப்படும்.

    சினிமா துறையைச் சேர்ந்த பலர் நடிகர் அஜித் செய்யும் உதவிகளைப் பற்றி பேசுவதை கண்டிருக்கலாம். சமீபத்தில் இரண்டு இயக்குநர்கள் அவர் செய்த உதவி பற்றி பேசியிருக்கிறார்கள்.

    சமந்தாவோட என்னோட ரொமான்ஸ் காட்சிகள் நல்லா இருக்கும்.. பழசை மறக்காத நாக சைத்தன்யா! சமந்தாவோட என்னோட ரொமான்ஸ் காட்சிகள் நல்லா இருக்கும்.. பழசை மறக்காத நாக சைத்தன்யா!

    கலை இயக்குநர்

    கலை இயக்குநர்

    நடிகர் மீசை இராஜேந்திரன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். சிறு படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரியும் ஒருவரது பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில். உடனடியாக 8 லட்சம் தேவைப்பட்டதாம். அதனால் வேறொருவரின் அலோசனையின் படி நடிகர் அஜித்தை சந்தித்திருக்கிறார். அதற்கு முன் அவர் படத்தில் வேலை பார்த்ததில்லை என்றாலும் அவரிடம் உதவி கேட்டிருக்கிறார். அஜித் அவரிடம் ஒரு பையை கொடுத்து, "இதற்கு மேல் தேவைப்பட்டாலும் கேளுங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். ஒரு லட்சம் இருக்கும் என நினைத்து பையை திறந்து பார்த்தபோது அதில் முழு 8 லட்சமும் இருந்ததாக இராஜேந்திரன் கூறியுள்ளார்.

    நந்தா பெரியசாமி

    நந்தா பெரியசாமி

    நடிகர் அஜித் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஜீவா ஒளிப்பதிவில் "மஹா" என்கிற படம் துவங்கப்பட்டு 12 நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அறிமுக இயக்குநர் நந்தா பெரியசாமிதான் அதன் இயக்குநர். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, அதன்பின் அஜித்திற்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு என அந்தப் படம் கைவிடப்பட்டது. அதன் பின் ஒரு கல்லூரியின் கதை படம் மூலம் இயக்குநராகி, மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார் நந்தா.

    உதவி

    உதவி

    மஹா படம் கைவிடப்பட்டதும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் படம் எதுவும் கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் வேறு சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு கதை சொல்ல அஜித்தே அனுப்பினாராம். அதுமட்டுமின்றி தனது பிள்ளைகள் ஸ்கூல் ஃபீஸையும் அஜித்தான் கட்டினார். இயக்குநரான பின்பு நானே அந்த உதவியை வேறு யாருக்காவது செய்யுங்கள் என்று கூறியதாக நந்தா பெரியசாமி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    Recommended Video

    AjithKumar | எதிரே வந்த பெண், Thala செய்த காரியம்! நெகிழும் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil
    மாரிமுத்து

    மாரிமுத்து

    பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் மாரிமுத்து. அடிப்படையில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் இவர். ஆசை படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியதால் அஜித்துடன் நல்ல பழக்கம் இருந்ததாம். அப்போது எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை தன் பிள்ளை படிக்கும்போது அஜித்தான் முழு ஸ்கூல் ஃபீஸையும் கட்டினார் என்று மாரிமுத்துவும் கூறியுள்ளார்.

    English summary
    Do you know for how many assistant directors Children’s Education Ajith have helped so far?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X