ஹரா இயக்குநரின் அடுத்த படைப்பு … படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகனின் நடிப்பில் உருவான திரைப்படம் ஹரா. இத்திரைப்படம் ஜூன் 7ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றநிலையில், ஹரா படத்தின் இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி தனது அடுத்த படத்திற்கு மகேஷ்வரா என தலைப்பு வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று கொண்டாடப்பட்ட மோகன் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ஆனால், 90 காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் கைகொடுக்காமல் போகவே சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இவர் நடிப்பில் 2008ம் ஆண்டு 'சுட்டப் பழம்’ வெளியானது ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோகன் லைம்லைட்டுக்கு வந்தார்.

Haara director vijay sri G maheshwara

ஹரா திரைப்படம்: கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன். ஆனால், திடீரென ஒருநாள் மகள் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விட, மோகனின் குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது. இதன்பிறகு மோகன், இப்ராஹீம் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு தனது மகளின் தற்கொலைக்கான காரணத்தை தேடி அலைகிறார். ஹீரோவின் மகளின் மரணத்துக்கு நியாயம் கிடைத்ததா, இறுதியில் என்னவானது என்பதே ஹரா படத்தின் திரைக்கதை.

கம்பேக்: இப்படத்தில் மோகனுடன், அனிதா நாயர், சாருஹாசன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால், இப்படத்தில் மோகனின் நடிப்பு மட்டுமே பேசும் வகையில் இருந்தது. இப்படம் மோகனுக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்து கணிசமான வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மோகன் தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் முதன் முறையாக வில்லனாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் மோகனின் வேறு ஒரு பரிமாணத்தை நாம் திரையில் பார்க்கலாம்.

அடுத்த படம்: இந்நிலையில், ஹரா படத்தை இயக்கிய விஜய் ஶ்ரீ ஜி தனது அடுத்த படத்திற்கு மகேஷ்வரா என தலைப்பு வைத்துள்ளார். யானை பின்னணியில் இருக்கும் இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரா படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி இதற்கு முன் தா தா 87 என்ற படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தை பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.இவர், புன்னகை தேசம், மானசீக காதல், பிறகு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X