சூர்யாவை போல திருமணத்தில் பிடிவாதம் பிடித்த கார்த்தி.. மனம் எப்படி மாற்றியது எப்படி தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் குடும்ப வாழ்க்கை எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. மும்பைக்கு குடிமாறிய ஜோதிகா, இப்போது சென்னைக்கு வந்தாலும், மாமனார் சிவகுமார் இருக்கும் வீட்டுக்கு வருவதில்லை என்பது தற்போதைய பேச்சு. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து ஜோதிகாவைக் குறை சொல்பவர்கள் பலர் உள்ளனர். குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் சிவகுமார். சூர்யாவையும், குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஜோதிகா மும்பைக்குப் போனது அவரை வருத்தமடையச் செய்தது. ஆனால், ஜோதிகா, இதை வேண்டுமென்ற செய்ய வில்லை, அவர் ஒரு நாளும் சூர்யாவின் கூட்டுக் குடும்பத்தை விட்டுப் போகமாட்டார்.
திருமணமாகி பல ஆண்டுகளாக சூர்யா வீட்டாரின் விருப்பப்படி, தன் விருப்பங்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்து இருக்கிறார் ஜோதிகா. மும்பையில் இருக்கும் தனது பெற்றோர்களுக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டதால், அவர்களை கவனித்துக்கொள்வதற்காக மும்பையில் குடியேறி இருக்கிறார். இதை ஜோதிகாவால் வெளிப்படையாக செய்ய முடியாமல் சிவகுமாரின் தலையீடு இருந்துள்ளது. குடும்பத்தில் அனைவரின் விஷயத்திலும் சிவகுமாருக்கு அதிகக் கட்டுப்பாடுடன் தான் நடந்து கொள்வார். இதற்கு மிகப்பெரிய உதாரணம் இளைய மகன் கார்த்தியின் திருமண விஷயத்தை சொல்லலாம்.

கார்த்திக் திருமணம்: 2011 ஆம் ஆண்டு கார்த்திக்கு தனது பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் மனைவியின் பெயர் ரஜினி சின்னசாமி. நடிகர் கார்த்தி சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படத்தில் நடித்த போது, நடிகை தமன்னாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இது கோலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டன, இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி பரவியது சிவகுமாரின் காதுக்கு வந்தது. தமன்னா தன் குடும்பத்தில் மருமகளாக வருவதை விரும்பாத சிவக்குமார், மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைத்தார். நடிகர் சூர்யா, ஜோதிகாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்ததால் அந்தத் திருமணம் நடந்தது. மீண்டும் ஒரு சினிமா நடிகையை, அதுவும் மும்பைக்காரப் பெண்ணை தன் வீட்டுக்கு மருமகளாக வருவதை சிவகுமாரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், கார்த்திக்கிற்கு சட்டுபுட்டுனு கல்யாணைத்தி நடத்தினார்.
மனம் மாறியது எப்படி: தந்தை சொன்னதை கேட்டு கார்த்தி அந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க முக்கிய காரணம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அட்வைஸ் தான் என்று, மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகுமார் கூறினார். அதாவது, "வீட்டில் ஒரு லவ் மேரேஜ் நடந்தது. அதில், அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதை ஏற்றுக்கொண்டார். கார்த்தி, நீயாவது உன் அப்பாவின் சந்தோஷத்துக்காக உன் ஜாதியில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொள் என்று ஜெயலலிதா அம்மா சொன்னார். அதன் பிறகுதான் கார்த்திக் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார் என்றார்.
சூர்யா ஜோதிகா காதல்: சூர்யாவின் பிடிவாதத்தால் தான் சூர்யாவின் காதல் திருமணத்திற்கு சிவகுமார் சம்மதம் சொன்னதாக இந்த வார்த்தைகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. நீண்ட காலமாகத் தன் வீட்டாரின் விருப்பப்படி வாழும் ஜோதிகாவின் கஷ்டத்தை சூர்யா புரிந்துகொண்டு, தனது மனைவிக்காக மும்பையில் குடியேறி இருக்கிறார். இதுபற்றி ஹாலிவுட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தன்னுடன் வாழ்வதற்காக ஜோதிகா தனது வாழ்க்கை முறையையும், ஆசைகளையும் தியாகம் செய்து இருக்கிறார். இதை நான் உணர்ந்து இருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











