“நானே வருவேன்“ யுவன் இசையில் எத்தனை பாட்டு தெரியுமா?.. முதல் சிங்கிள் ரிலீஸ் விரைவில் !
சென்னை : நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் இசையமைக்கும் பணி முடிவடைந்துவிட்டநிலையில் இப்படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன என்ற அப்டேட் வெளியாகி உள்ளது.
நானே வருவேன் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

தனுஷ்
நடிகர் தனுஷ் இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில், நான்காவது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். துள்ளுவதோ இளமை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாக தனுஷ். தற்போது ,கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட்,பாலிவுட் என பான் இந்திய ஹீரோவாக மாறிவிட்டார்.

நானே வருவேன்
11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் கைகோர்த்துள்ளார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் தயாராகி வருகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தாறுமாறான பாடல்
இதனையடுத்து தற்போது இந்த படத்தில் எத்தனை பாடல்கள் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உள்ளதாகவும் அவை அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபிள் ஆக்ஷன்
இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











