‘ராமாயணா’வில் ஏ.ஆர். ரஹ்மானின் சம்பள ரகசியம் வெளியானது.. இது தான் உண்மையான பிரமாண்டம்!
சென்னை: நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமிட் மல்ஹோத்ரா தயாரித்து இருக்கும் திரைப்படம் 'ராமாயணா', இந்த படத்தில் ரன்பிர் கபூர் ராமராகவும், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்து இருக்கும் நிலையில், இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதிகாசத் திரைப்படம் ராமாயணா: ராமாயணா படத்தின் டீசர் ஏப்ரல் 2ந் தேதி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடைபெற்றது. அவதார் , இண்டர்ஸ்டெல்லர் போன்ற படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் செய்த DNEG நிறுவனம் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகி இருக்கும் ராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும், இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி பாண்டிகைக்கும் உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











