Karthi salary: மெய்யழகன் படத்தில் கார்த்தி வாங்கிய சம்பளம்..எவ்வளவு தெரியுமா?

சென்னை: கார்த்தி நடிப்பில் 'மெய்யழகன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ப்ரிவ்யூ ஷோ பார்த்த பலர் படத்தை பாராட்டி வரும் நிலையில், இப்படத்திற்கு கார்த்திக் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியன் செல்வன் படத்தில் வன்னியத்தேவனாக நம் மனதில் இடம்பிடித்தார் கார்த்தி. அந்த படத்தைத்தொடர்ந்து, கார்த்தியி 25வது படமான ஜப்பான் படுதோல்வியை சந்தித்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதால் அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கார்த்தி இருந்த நிலையில், மெய்யழகன் படம் தற்போது வெளியாகி உள்ளது. படம் இன்று வெளியாக உள்ள நிலையில், நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு மெய்யழகன் படம் திரையிடப்பட்டது. படத்தைப்பார்த்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

meiyazhagan karthi salary

மெய்யழகன்: விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள 2வது படமாக தான் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தியுடன், அரவிந்த் சாமி, ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

கார்த்தி சம்பளம்: சூர்யாவின் 2டி என்டர்டெய்ண்மெட் நிறுவனம் தயாரித்துள்ள மெய்யழகன் படத்திற்காக கார்த்தி 15கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தமிழ்,தெலுங்கு என மெய்யழகன் படம் ஒரே நேரத்தில் இன்று வெளியான, தெலுங்கில் இப்படத்திற்கு சத்யம் சுந்தரம் என தலைப்பு வைப்பட்டுள்ளது. இப்படத்தில் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் லட்டு மிகவும் சென்சிடிவ்வான விஷயம் என்று கார்த்திக் பேசியதை, ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் கண்டித்ததை அடுத்து ட்விட்டரில் கார்த் பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ந்தார் 2: மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் 2-ம் பாகத்திற்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடித்தது போல, இதிலும் பாலிவுட் நடிகர் ஒருவர் கமிட்டாகி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X