அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய கவின்.. ஸ்டார் படத்திற்கு எவ்வளவு வாங்கினார் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் கவின். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான இவர். தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் ஸ்டார் திரைப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் வீட்டில் கவின், சாண்டி மாஸ்டர், முகேன், லாஸ்லியா என நான்கு பேரும் டீமாக இருந்தனர். இதில், அதிக நேரம் லாஸ்லியாவின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்ததால் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதன்பின் கிடைத்த வரைக்கும் லாபம் என்று பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

டாடா: இதையடுத்து கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான லிஃப்ட் திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுத்தது. அந்த படத்தில் ஐடி ஊழியர்களின் வலியை அழகாக சொல்லி இருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து டாடா படத்தில் நடித்தார். இந்த படம் வரவேற்போடு மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில், கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட புகழ் அபர்னா தாஸ் நடித்திருந்தார். மேலும், முக்கியமான கேரக்டர்களில் பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். டாடா படத்தை இளசுகள் முதல் பெருசுகள் வரை ரசித்து பார்த்தனர்.
ஸ்டார்: இந்த திரைப்படத்தை தொடர்ந்து, இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படம் கவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதில் கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் பார்த்தவர்கள் அனைவரும் கவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்த படத்திற்காக கவின் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதற்கு முன் 35 முதல் 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிய கவின் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார்.
ஒரு நடிகரின் மார்க்கெட் தான் சம்பளத்தை நிர்ணயிக்கிறது என கவின் இதுபற்றி கூறி இருக்கிறார். ஸ்டார் படத்தின் வெற்றியால் நல்ல ஹீரோ என தனக்கு கிடைத்த பெயரை சரியாக பயன்படுத்தி சிவகார்த்திகேயன் போல் ஆகவேண்டும் என்று திட்டம் போட்டுவிட்டார். தொடர்ந்து கவின் நல்ல கதைகளை தேர்வு செய்து கேட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











