ஹீரோனா சும்மாவா... அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சூரி.. கருடன் படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள கருடன் படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்க சூரி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக யோசித்து கதைகளை இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குநர்களில் முக்கியமானவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில், கடைசியாக சூரி நடிப்பில் விடுதலை திரைப்படம் வெளியானது. இதில், சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்க விஜய் சேதுபதி சேத்தன், கௌதம் மேனன் என பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Actor Soori Garudan Garudan

சூரியின் கருடன்: இதுவரை நகைக்சுவை நடிகராக நடித்து வந்த சூரி, விடுதலை படத்தில் கதாநாயகனாக குமரேசன் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி சூரிக்கு பாராட்டுகள் குவிந்தன. விடுதலைப்படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக கருடன் படத்தில் நடித்தார். இதில், சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மிரட்டலான டிரைலர்: இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியது. அதில் இடம் பெற்ற வசனம், நம்ம ஆசைப்பட்ட விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ இயற்கையோ அதை சரியான வழியில முடிச்சி வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திக்கிட்டு இருக்கு என்கிற வசனம் கவரும் வகையில் இருந்தது. இதில் சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் கருணா நண்பனாக நடித்துள்ளார் சூரி. விடுதலை படத்தைப் போல இந்த படத்திலும், ஆக்ஷன் காட்சியிலும், எமோஷனிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

பொறுப்புணர்ச்சி: முன்னதாக இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட சூரி, காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவோம், ஆனால், கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன் என்றார். கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டியதாக இருக்கிறது என்றார்.

சூரியின் சம்பளம்: இன்று இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கும் நிலையில், இந்த படத்தில், சூரி என்பதை விட, சொக்கன் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். நகைச்சுவை, ஹீரோயிசம், நடிகன் என பல முகங்களை களமிறக்கி, புதிய சூரியாக வந்திருக்கிறார் ஹீரோ சூரி. இந்த படத்திற்காக ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X