விஜய் பெரிய நடிகரா இருக்கலாம்.. ஆனால், இங்க நான் தான் டாப்.. புஷ்பா 2க்கு அல்லு அர்ஜுனின் சம்பளம்!

சென்னை: புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் எப்போதும் வெளியாகும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். புஷ்பா 2 படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

'புஷ்பா தி ரைஸ்' படம் 2021ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அந்த படத்தில் கதைக்களம் அல்லு அர்ஜூனின் நடிப்பு, சமந்தா, ராஷ்மிகா மந்தனாவின் ஆட்டம் சும்மா தரமாக இருந்தது. படத்தை ரசிகர்கள் தியேட்டரில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். இதைத் தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மூன்று வருடமாக நடந்து வருகிறது.

pushpa 2 allu arjun salary 2

புஷ்பா 2: முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பா எப்படி, பெரும் சாம்ராஜ்ஜியத்தை கையில் எடுத்து முதலாளியாக மாறினார் என்று சொல்லப்பட்டது. இரண்டாம் பாகத்தில் தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தை ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் எதிர்த்து எப்படி காப்பாற்றப்போகிறான் என்பது படமாக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா,பிரியாமணி, மைம் கோபி, பிரம்மாஜி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பான் இந்திய படம்: இப்படம் ஆகஸ்ட் மாதம் 15 ந் தேதி சுகந்திர தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு படம், டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் நாளை 17ஆம் தேதி பாட்னாவில் காந்தி மைதானத்தில் மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளது.

ரூ.300 கோடி சம்பளம்: இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் இந்த படத்தில் நடிக்க, 300 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக தளபதி விஜய் இருந்த நிலையில், 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற இடத்தை அல்லு அர்ஜுன் பிடித்துள்ளார். தளபதி விஜய் லியோ படத்தில் சுமார் 150 கோடி சம்பளம் வாங்கியதாகவும், கோட் படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் தற்போது கமிட்டாகி உள்ள தளபதி 69 படத்துக்காக நடிகர் விஜய் 275 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X