வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் நடித்து வேட்டையன் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக இன்று வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் 170வது படமாக வேட்டையன் உருவாகி உள்ள இந்த படத்தில்,அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் மஞ்சுவாரியர் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளனர். அண்மையில் வேட்டையன் படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது எனலாம். அதில், காவல்துறையின் மோதல் மரணங்களுக்கு ஆதரவாகச் சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. 'ஜெய்பீம்' படம் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிரான படமாக இருந்த நிலையில், 'வேட்டையன்' படத்தில் இதுபோன்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது.

vettaiyan amithab bachchan salary

ரஜினிகாந்தின் வேட்டையன்: வேட்டையன் படத்தின் கதை ரஜினிகாந்திற்காக உருவாக்கப்பட்ட கதை இருந்தாலும், இந்தக் கதையை ஒரு ஸ்டார் நடிகரை வைத்து எடுத்தால், நன்றாக இருக்கும் என நினைத்திருந்தேன். ஜெய்பீம் படத்தில் சூர்யா நடித்திருந்ததால்தான், அந்தப் படத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.அதே, அறிமுகமில்லாத ஒரு நடிகர் அந்த படத்தில் நடித்திருந்தால், அந்த படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து இருக்காது.அதேபோலத்தான் வேட்டையன் படத்தின் கதையை யோசித்தபோது, ரஜினிகாந்த் நினைவுக்கு வந்தார்.

இயக்குநர் பேட்டி: இந்த படத்தில் அவருக்கு எதிரான ஒரு பெரிய ஸ்டார் நடிகர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அபிதாப் பச்சனிடம் ஸ்க்ரிப்ட் கொடுத்தேன். அவர் ரஜினியை எதிர்க்கும் கதாபாத்திரம் என்பதால், அந்த கேரடக்டர் குறித்து வெளிப்படையாகவே கேட்டார். கதையையும் பாத்திரத்தையும் சொன்ன பிறகு அந்த ரோலில் அமிதாப் நடிக்க ஒத்துக்கொண்டதாக ஒரு பேட்டியில் இயக்குநர் ஞானவேல் கூறியிருந்தார்.

அமிதாப் பச்சனின் சம்பளம்: இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளார். வேட்டையன் படத்திற்கு முன்பாக அந்தா கானூன், கிராஃப்தார், ஹம் ஆகிய படங்களில் நடித்துளள்னர். இப்படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மற்றவர்களின் சம்பளம்: க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ரூ.125 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதேபோல மஞ்சு வாரியருக்கு ரூ.2 முதல் ரூ.3 கோடியும், ஃபஹத் பாசில் ரூ.2 முதல் ரூ.4 கோடி வரையும், ராணா டகுபதி ரூ.5 கோடியும், ரித்திகா சிங் ரூ.25 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஹிட்டடித்த பாடல்கள்: லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் மனசிலாயோ பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. தமிழகத்தில் மட்டும் வேட்டையன் திரைப்படம் சுமார் 800 திரைகளில் 9 மணி முதல் திரையிடப்படுகிறது. இன்று ஒரு நாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதனால், வேட்டையன் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X