பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் சீசன்6ல் ஜிபி முத்து வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6ன் முதல் போட்டியாளராக உள்ளே வந்த ஜிபி முத்துக்கு அவரது ரசிகர்கள் ஆர்மியை தொடங்கி இணையத்தையே தெறிக்கவிட்டனர்.

இந்த சீசனின் வலுவான போட்டியாளராக இருந்த ஜிபி முத்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

முதல் போட்டியாளர் ஜிபிமுத்து

முதல் போட்டியாளர் ஜிபிமுத்து

மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் 9 ஆம் தேதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகம் செய்து கமல் தொடங்கிவைத்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக உள்ளே வந்தவர் ஜிபி முத்து. அவர் வீட்டிற்கு வந்ததுமே போட்டியாளர்களுடன் நட்பாக பழகினார். சக போட்டியாளர்களுடன் அலப்பறை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

முதல் கேப்டன்

முதல் கேப்டன்

அது மட்டும் இல்லாமல் கேப்டன் பதவிக்கு நடந்த போட்டியின் போது, ஜிபி முத்து கடுமையான காய்ச்சலில் இருந்தார். ஆனால், காய்ச்சலை கண்டுகொள்ளாமல் கடிகாரத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் நின்று பிக் பாஸ் சீசன்6ன் முதல் கேப்டன் ஆனார். கலகலப்பாக, வெகுளித்தனமாக அவர் பேசியதை மட்டுமே பார்த்து வந்த அவரது ரசிகர்கள், ஜிபி முத்துவின் விடா முயற்சியை பார்த்து உண்மையில் வியந்து போனார்கள்.

அழுதுகொண்டே இருந்த ஜிபிமுத்து

அழுதுகொண்டே இருந்த ஜிபிமுத்து

முதல் கேப்டனாக இருந்த ஜிபி முத்து வீட்டையும் சரியாக கவனித்துக் கொண்டார். அவர் வீட்டை நிர்வகித்தது அனைவருக்கும் பிடித்திருந்தது. கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டிருந்த ஜிபி முத்து தனது குடும்பத்தையும், மகனையும் நினைத்து அழுதுக்கொண்டே இருந்தார். நான் வீட்டுக்கு போகணும், தம்பியை வரச்சொல்லுங்க என்று அழுதுக்கொண்டே இருந்தார். பிக் பாஸ் அவரை பல முறை சமாதானப்படுத்தியும் இவர் அழுதுக்கொண்டே இருந்தார்.

வெளியேறினார்

வெளியேறினார்

இதையடுத்து, ஜிபி முத்துவிடம் பேசிய கமல், உங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கு , மக்கள் நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பதாக கூறினார். ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாத ஜிபி முத்து, பணம், புகழை விட என் மகன் தான் எனக்கு முக்கியம், மக்களே என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டு வெளியேறினார்.

14 நாள் சம்பளம்

14 நாள் சம்பளம்

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 14 நாட்கள் இருந்த ஜிபி முத்து வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஜிபி முத்துக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் என்ற முறையில், அவருக்கு மொத்தமாக ரூ. 2 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜிபிமுத்து வெளியேறாமல் மட்டும் இருந்து இருந்தால் நிச்சயம் டைட்டிலை வென்று இருப்பார் என் அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X