Bigg Boss season 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது.கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்சியதால், இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதைத் தொடர்ந்த, பிக்பாஸ் சீசன் 8-ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள நிலையில் அவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழச்சியின் 7 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அடுத்து வர இருக்கும் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். .இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், சினிமாவில் கொடுக்கப்பட்டுள்ள கமிட்மெண்டுகளால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத சூழலில் இருக்கிறேன் . நான் விரும்பி ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன்.

பிக் பாஸ் சீசன் 8: எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என கூறியிருந்தார். கமல் விலகியதை அடுத்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதில் சிம்பு,சரத்குமார், விஜய் சேதுபதி என பலரின் பெயர்கள் அடிபட்டன.
விஜய்சேதுபதி: இதைதொடர்ந்து, பிக்பாஸ் எட்டாவது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில், துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, இன்று பாலிவுட்டிலும், தென்னிந்திய அளவிலும் பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி சரியான தேர்வு என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்,
சம்பளம் எவ்வளவு: இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக அவருக்கு சுமார் ரூ.50 காேடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ.1 கோடி சம்பளமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு, சுமார் ரூ.120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











