‘யூத்‘ படத்திற்காக கென் கருணாஸ் வாங்கிய சம்பளம்.. ஆத்தாடி தலையே சுத்துதே!
சென்னை: நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்திற்காக கென் கருணாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதைக்கேட்ட ரசிகர்கள் ஆத்தாடி முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா என வாயை பிளந்துள்ளனர்.
யூத் படம்: கென் கருணாஸ் அசுரன் படத்தில் தனுஷின் மகனாக இயல்பானை நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த கென் கருணாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்து யூத் படத்தை இயக்கி அதில், நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் மார்ச் 19ந் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.இதில், தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை: 11ஆம் வகுப்பு படிக்கும் கென் கருணாஸ், எப்படியாவது காதலிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் பள்ளியில் காதலிக்க தொடங்கி, கல்லூரியில் காதலை தொடர்ந்து, அதே பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருக்கிறார். ஆனால், ஒரு பெண் கூட இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் தான் மீனாட்சிக்கும் கென்னுக்கும் இடையே காதல் மலர்கிறது. மீனாட்சி தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்கு போக, அந்த நேரத்தில் சோனல் என்கிற பெண் கென்னிடம் தனது காதலை சொல்ல, கென் அந்த காதலையும் ஏற்றுக்கொண்டு சோனலை காதலிக்கிறான். கென் - சோனல் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிடும் மீனாட்சி பிரேக்கப் செய்கிறாள். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் யூத் படத்தின் மீதி கதை.
கென் சம்பளம்: பள்ளி வாழ்க்கையில் நடக்கும் ரகளை , காதல் , ஏமாற்றம் என நகைச்சுவை கலத்த திரைப்படமாக இருப்பதால் இந்த படத்தை பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் இந்த திரைப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான கென் கருணாஸ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவத கென் கருணாஸ் இந்த படத்திற்கு ரூ. 2 கோடியை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications











