Muthukumaran: டைட்டிலை தட்டித்தூக்கிய முத்துக்குமரன்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
சென்னை: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக முடிவடைந்தது. இதில், டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டைட்டிலை வென்ற முத்து நெகிழ்ந்து பேசினார். அப்போது,
பரிசு தொகையை இதற்காக செலவு செய்ய இருப்பதாக கூறினார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் பல சீசன்களை தொகுத்து வழங்கிய கமல், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை அடுத்து, இந்த சீசனை யார் தொகுத்து வழங்க போகின்றார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆனால், ஆரம்பத்திலேயே, நான் கமல் போல இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், நேருக்கு நேராகவே பல கேள்விகளை கேட்டு, போக போக மக்களுக்கு பிடித்துவிட்டார்.
டைட்டில் வின்னர்: இதையடுத்து, அனைவரும் எதிர்பார்த்த கிராண்ட் பினாலே நேற்ற நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மேடை பேச்சாளரான முத்துக்குமரன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய கருத்துக்களை தைரியமாக முன்வைத்து பேசிய விதமும், அதே நேரம் தவறு செய்துவிட்டால், அதற்கு மன்னிப்பு கேட்ட விதமும் மக்களுக்கு பிடித்துவிட்டது. இதனால், முத்து நாமினேட் செய்யப்பட்ட போதும், மக்கள் அவருக்கு வாக்களித்து காப்பாற்றினார்கள். இதனால், 50 நாட்களை கடந்த பொழுதே முத்து தான் வின்னர் என்று பலரும் தீர்மானித்து விட்டனர்.சவுந்தர்யா 2வது இடத்தையும், விஜே விஷால் மூன்றாவது இடத்தையும், ரயான் 4வது இடத்தையும், பவித்ரா ஜனனி 5வது இடத்தையும் பிடித்தனர்.
மொத்த தொகை: முத்துக்குமரனுக்கு பரிசாக 40 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த பணத்தை, கடன் இல்லாமல் வீடு கட்ட பயன்படுத்துவேன் என முத்துக்குமரன் கூறினார். மேலும் சமூகத்திற்காகவும் சில விஷயங்கள் செய்யப்போவதாக அவர் கூறினார். இதுமட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்த முத்துகுமரனுக்கு சம்பளமாக 10 லட்சமும் வழங்கப்படும். ஆனால், இந்த சீசனில் மக்களுக்கு பெரிய வருத்தம் என்ன வென்றால்,பணப்பெட்டி டாஸ்க்கில் 2 நொடி தாமதத்தால் ஜாக்குலின் அதிரடியாக வெளியேற்றப்பட்டது தான், அவர் மட்டும் வீட்டில் இருந்து இருந்தால், நிச்சயம் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்து இருக்கும் என மக்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











