கமல்ஹாசனுக்கு 50 கோடி கடன்.. சொத்து இவ்வளவு தான்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவரும் கமல்ஹாசன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார். அதில் தனக்கு ரூ 49 கோடி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகநாயகன், ஆண்டவர், விண்வெளி நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் இருந்து தக் லைஃப் திரைப்படம் வரை 65 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகராக உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து எண்ணற்ற விருதுகளை குவித்துள்ளார்.

கமல்ஹாசன்: சினிமாவில் மட்டுமே நடிப்பதை விருப்பமாக கொண்டு இருந்த கமல்ஹாசன் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 2019ஆம் அண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். இதில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் தோல்வி அடைந்தார். 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து 1 ராஜ்யசபா சீட்டை பெற்றார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்தி தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

Kamal Haasan Thug life
Photo Credit:

சொத்துமதிப்பு: இதையடுத்து, வரும் ஜூன் 19-ம் தேதி மாநிலங்களளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி பதவிக்கு போட்டியிட உள்ளார். இதை தொடர்ந்து, கமல் நேற்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில், சொத்துவிவரத்தை கமல் வெளியிட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவரது தொழிலை நடிப்பு என்றும், சென்னை ஆழ்வார்பேட்டையில் இரண்டு, உத்தண்டி மற்றும் சோழிங்கநல்லூரில் தலா ஒன்று என்று நான்கு வணிகக் கட்டடடங்கள் உள்ளன என்றும், திண்டுக்கல் வில்பட்டியில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு ரூ.22.24 கோடி, கையில் ரொக்கமாக ரூ.2.60 லட்சம் உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவையில் தேர்தல் நடைபெறும் அதேநாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தக் லைஃப்: கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் தியேட்டரில் 5ந் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து கமல் பேசியது சர்ச்சையான நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாக வேண்டும் என்றால், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் கெடு விதிக்கப்பட்டது. ஆனால், கமல், தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன், தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார். இதனால், தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X