‘தக் லைஃப்‘ படத்திற்காக சிம்பு வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?

சென்னை: திரும்பி பக்கம் எல்லாம் தக் லைஃப் திரைப்படத்தை பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. நாயகன் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னம், கமல்ஹாசன் இருவரும் இத்திரைப்படத்தில் இணைந்து இருப்பது தான், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அதிகமாக உள்ளது. இதில், நடிகர் சிலம்பரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக சிம்பு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சிம்புவின் கதை முடிந்தது, அவர் பீல்ட் அவுட்டாகி விட்டார் என சொன்னவர்களுக்கு மாநாடு திரைப்படத்தின் வெற்றியின் மூலம் சரியான பதிலடி கொடுத்தார் சிம்பு. அந்த படத்தை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' உடல் எடையை குறைத்து மாஸாக என்ட்ரி கொடுத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல கலெக்ஷனை அள்ளியது. அதைத் தொடர்ந்து 'பத்து தல' படம் வெளியானது, அந்த படமும் சிம்புவிற்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு சிம்பு முதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பான் இந்திய திரைப்படமாக, பிரம்மாண்டமாக பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் நாளை மறுதினம் திரையரங்கில் வெளிவரவுள்ளது.

Thug life Simbu salary

தக் லைஃப்: இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடியாக இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'விண்வெளி நாயகா' பாடலும் 'முத்த மழை' பாடலும் "ஜிங்குச்சா சிக்காத காளை" பாடலும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக இசைவெளியிட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்த மழை' பாடலை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அந்த பாடல் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லாம். அதுமட்டுமில்லாமல், தக் லைஃப் படத்தின் டிரைலரை பார்க்கும் போது, அதில் நாயகன் வாடை வீசுகிறது. இதில், ரங்கராய சக்திவேல் நாயக்கன் ரோலில் கமல் நடித்துள்ளார். அவரின் வளர்ப்பு மகளான சிம்பு நடித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் சிம்புவே கமலுக்கு எதிரியாவது தான் கதை. இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, கமலின் கழுத்தை பிடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது, அவரின் கழுத்தை பிடிக்க மிகவும் பயந்தேன், பின், கமல் சார் தான், என்னை தட்டிக்கொடுத்து நடிக்க வைத்தார் என்று பேசி இருந்தார்.

சிம்புவின் சம்பளம்: இப்படி தக் லைஃப் திரைப்படத்தில் சிம்புவிற்கு கமல்ஹாசனுக்கு நிகரான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரின் அசுரத்தனமான நடிப்பை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இத்திரைப்படத்திற்காக சிம்புவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக சிம்புவிற்கு ரூ. 40 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் திரை வாழ்க்கையில் அதிக சம்பளம் வாங்குவது இந்த படத்திற்குத்தான். கமலுக்கு ஈக்குவலான கதாபாத்திரம் என்பதால் இந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தக் லைஃப் வெளியாகும் தியேட்டரில் போலீஸ் பாதுகாப்புடன் படத்தை வெளியிட அனுமதி கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X