அமரன் படத்திற்காக ரிஸ்க் எடுத்த சிவகார்த்திகேயன்.. அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், தீபாவளி பண்டிகைக்கு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் வெளியாக உள்ள திரைப்படம் அமரன். இந்த படத்திற்காக கடுமையாக உடல் பயிற்சி செய்து முற்றிலுமாக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார்.தற்போது இவர் இந்த படத்திற்கு வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வலிபர் சங்கம், மான் கராத்தே, ரொமோ, எங்கள் வீட்டுப்பிள்ளை, டாக்டர், டான், மாவீரன் என பல வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். கடந்த பொங்கலுக்கு பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த அயலான் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் அதற்கான வசூலை பெறவில்லை. இதனால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

amaran sivakarthikeyan salary

சிவகார்த்திகேயனின் அமரன்: தற்போது சிவகார்த்திகேயன், கமல் ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும், இதில் சாய் பல்லவி, ஸ்ரீகுமார்,சுரேஷ் சக்கர வர்த்தி, ராகுல் போஸ் என பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

படத்தின் கதை: மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன். 1983ம் ஆண்டு பிறந்த முகந்த் வரதராஜன், ராஜ்புத் ரெஜிமென்ட் எனும் ராணுவ கம்பெனியில் மேஜராக செயல்பட்டு வந்த போது, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டு வீரமரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. உயிரிழந்த பின் அசோக சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயன் கடுமையாக உடற்பயிற்சி செய்து நடித்துள்ளார்.

சம்பளம் எவ்வளவு: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X