கேம் சேஞ்சர் படத்திற்காக ஷங்கர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. ரூ.400 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில், இயக்குநர் ஷங்கரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் அண்மையில் இந்தியன் 2திரைப்படம் வெளியானது. 27 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அந்த படம் பல ஆண்டுகளாக நடைபெற்று, பல பிரச்சனைகளை சந்தித்ததால், அந்த படத்தின் மீது மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியானது, மோசமான விமர்சனத்தை சந்தித்தது. சங்கர் இயக்கிய எந்த படமும் இந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டது இல்லை. இதையடுத்து தயாராக இருக்கும் இந்தியன் 3 படமே வேண்டாம் என்று ரசிகர்களே சொல்லும் நிலை உருவாகி உள்ளது.

கேம் சேஞ்சர்: இந்தியன் 2 படத்தை எடுத்து கொண்டு இருக்கும் போதே,தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வந்தார். அரசியல் அதிரடி கொண்ட கேம் சேஞ்சர் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுத, ஷங்கர் இயக்கி இருக்கிறார். ரூ.400 கோடி செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் பான் இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ந் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால் படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட உள்ளது.
சங்கர் வாங்கிய சம்பளம்: இப்படத்தில் நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு கதாபாத்திரம் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் சமூகத்தின் மீது, அக்கறைகொண்ட இளைஞர் என இரண்டு விதமான ரோலில் நடித்துள்ளார். இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த சம்பளம் கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது. கேம் சேஞ்சர் படத்திகாக இயக்குனர் ஷங்கர் ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











