சீனாவில் எடுபடாத மகாராஜா படம்.. டல்லடிக்கும் 2 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை:சாதாரண நடிகராக இருந்து இன்று மிகப்பெரிய உச்சத்தை தொட்டு முன்னணி நடிகராக இருக்கிறார் விஜய்சேதுபதி. ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதில் ஸ்கோர் செய்துவிடும் விஜய்சேதுபதி, தனது 50வது படமான மகாராஜா படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளிய திரைப்படம், தற்போது சீனாவில் வெளியாகி உள்ளது. அதன் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.
குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50ஆவது படமாகும்.இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும், நட்டி என்கிற நடராஜன், சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

மகாராஜா: சலூன் கடை வைத்து இருக்கும் விஜய்சேதுபதி அந்த படத்தில் மகாராஜா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இவர் காவல்நிலையத்தில்,ரத்த காயத்துடன் வந்து லட்சுமியை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். பதறிப்போன போலீசார் லட்சுமி யார் மனைவியா? மகளா? என விசாரிக்க அது ஒரு குப்பை தொட்டி என்று தெரிந்ததும், இதனால் கடுப்பாகும் போலீஸ், இதற்கு எல்லாம் கேஸ் கொடுக்க முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர். இதனால், லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால், பணம் தருகிறேன் என்று செல்ல, போலீசார் லட்சுமி என்கிற குப்பை தொட்டியை தேடத் தொடங்குகின்றனர்.
திடுக்கிடும் பல தகவல்கள்: அதன் பின், விஜய்சேதுபதி குப்பை தொட்டியை தேடுவது ஏன், அவரது குடும்பத்திற்கு என்ன ஆச்சு என்கிற அடுத்தடுத்த பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவருகிறது. இயக்குநர் நிதிலன் சாமிநாதன் படத்தை மிகவும் நேர்த்தியாக நகர்த்தி கொண்டு சென்று அனைவர் இடத்திலும் பாராட்டை பெற்றார். உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடியை வசூலித்தது. வழக்கமாக எந்த நடிகர்களுக்கும் 50வது படம் திறப்பாக அமையாத நிலையில், விஜய் சேதுபதிக்கு இப்படம் ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது.
ஓடிடி கலக்கியது: தியேட்டரில் பலரின் மனதை கவர்ந்த 'மகாராஜா’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம், தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. இப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடியில் படத்தை ரசித்துப்பார்த்தனர்.
டல்லடிக்கும் வசூல்: இந்த நிலையில், மகாராஜா படம் சீனாவில் 40 ஆயிரம் தியேட்டரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. மகாராஜா படம் இதுவரை இரண்டு நாட்களில் பிரிமியர் காட்சிகளில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, விஜய்சேதுபதி நடித்த மகாராஜா படம், இதுவரை சீனாவில் ரூ. 2.15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியான போதும், எதிர்பார்த்த வசூலை எடுக்க முடியாமல் வசூல் டல் அடித்து வருகிறது. இனிவரும், நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











