முதல் படத்திலேயே 10 கோடி சம்பளமா? இதெல்லாம் ரொம்ப டூமச்.. விஜய் மகனா இருந்தாலும் இப்படியா?
சென்னை: தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகராக இருக்கும் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்குநராகும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் அவர் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் விஜய், இவர்.தனது அப்பாவின் மூலம் தான் நடிகராக மாறினார் என்றாலும், எனது கடுமையான முயற்சியால் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து இன்று, அனைவர் மனதிலும் தளபதி என்ற பெயருடன் வீறு நடைபோட்டு வருகிறார். பல ஆண்டு காலம், நடிகராக ஜொலித்துக் கொண்டு இருந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்றால் அரசியல் கட்சியை தொடங்கி அரசியலிலும் தடம் பதித்துள்ளார்.

நடிகர் விஜய்: 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பணிகளை செய்து வருகிறது. கட்சியின் மாநாட்டில் பேசிய விஜயின் பேச்சு மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஒரு உற்சாகமாகவே இருந்தது என்று கூறலாம். அரசியல் கட்சியை தொடங்கியதை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த விஜய், கோட் படத்திற்கு தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
ஜேசன் சஞ்சய்: தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகும் நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் இயக்குநராக கமிட்டாகி உள்ளார். இதன் அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் எந்தவிதமான படம் குறித்த எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்துவிட்டு, சில குறும்படங்களை இயக்கி உள்ளார். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் நேரடியாக இயக்குநராகி உள்ளார் ஜேசன் சஞ்சய்.

டூமச் சம்பளம்: இந்நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்திற்காக அவர் தொகையை சம்பளமாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு 10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு கூறப்படுகிறது. யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் நேரடியாக இயக்குநராக மாறும் ஜேசன் சஞ்சய்க்கு முதல் படத்திலேயே 10 கோடி சம்பளமா என்று இணையத்தில் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். என்னத்தான் இவர் விஜய் மகனாக இருந்தாலும், முதல் படத்திற்கு பத்து கோடி என்பது டூமச் என்று சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், நடிகர் விஜய் தனது மகனை ஜேசன் சஞ்சய்யை நடிகராக வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதற்காக சில முன்னணி இயக்குநர்களும் காத்திருந்தனர். ஆனால், சஞ்சய் தாத்தா எஸ்.ஏ சந்திரசேகரைப் போல இயக்குநராக மாறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











