saindhavi: விவாகரத்திற்கு பின் சைந்தவி எடுத்த முடிவு.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, இருவரும் பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்துள்ளனர். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சைந்தவியின் வீடியோ ஒன்றை ஜீ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் 10ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போதிலிருந்து காதலித்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு, அன்வி எனும் 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஜி.வி.பிரகாஷின் இசையில் சைந்தவி பல பாடல்களை பாடி உள்ளார். தனுஷ் நடித்த அசுரன் படத்தில் இடம் பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடலை பாடியது சைந்தவி தான், அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பாடலாக மாறியது சைந்தவியின் குரலால் தான்.

ஜிவி பிரகாஷ்,சைந்தவி பிரிந்தனர்: கடந்த சில நாள்களாக ஜிவி பிரகாஷும் சைந்தவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் இணையத்தில் பரவிய நிலையில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில், எங்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இவர்களின் பிரிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சைந்தவி எடுத்த முடிவு: விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஜிபி பிரகாஷ் நடிப்பு, இசையமைப்பு என வழக்கம் போல படு பிஸியாக இருக்கிறார். ஆனால், சைந்தவி பெரும் பாலும் மீடியாக்களில் தென்படாமல் இருந்தார். ஆனால் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சைந்தவி க்யூட்டாக டான்ஸ் ஆடி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், சைந்தவி மேடம் எப்போதும் இப்படியே சந்தோஷ இருங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி: பாடகி சைந்தவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியான அர்ச்சனா தொகுத்து வழங்க, நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா, எஸ்பிபி சரண் ஆகியோர் உள்ளனர். கடந்த வாரம் முதல் மெகா ஆடிஷன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிறப்பு நடுவராக வைக்கம் விஜயலட்சுமி பங்கேற்க உள்ளார். இல்லங்களை தேடிவரும் செல்ல குரல் நிகழ்ச்சியை இலவசமாக ஜீ5 ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கலாம்.
சரிகமப சீசன் 4ல் முதல் ரன்னராக வடசென்னையை சேர்ந்த ஸ்வேதா, 2-வது ரன்னராக விழுப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வீரபாண்டி தேர்வு செய்யப்பட்டனர். மக்களின் தேர்வு என்ற அடிப்படையில் மரக்காணம் சரண் நான்காவது இடத்தை பிடித்தார். சீனியர்களுக்கான சரிகமப சீசன் 4 முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்குபெறும் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











