தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ஜி.பி.முத்துவிடம் கோபித்துக் கொண்ட பிக்பாஸ்
தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா என ஜிபி.முத்துவிற்கு பிக்பாஸ் பெரிய அறிவுரை கூறினார். தலைவராக முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
ஜி.பி.முத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைவராக செயல்படாமல் அவரவர்கள் இஷ்டப்படி செயல்படுவதை தட்டிக் கேட்காதவராக இருக்கிறார்.
மைக்கை மாட்டாமல் இருப்பது, தூங்குவது என ஹவுஸ்மேட்ஸ்கள் செயல்படுவதை ஜி.பி.முத்து கேட்கவில்லை என பிக்பாஸ் கோபித்துக்கொண்டார்.

முதல் தலைவர் ஜி.பி.முத்துவுக்கு ஆளுமை இல்லையே
பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரம் நிகழ்ச்சிகள் முடிந்த பின் தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் இருந்த சாந்தி, ஜனனியை வீழ்த்தி ஜி.பி. முத்து தலைவராக தேர்வானார். தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன் ஹவுஸ் மேட்ஸ்களை வேலைகளுக்கு டீமாக பிரிப்பதில் அவர் காட்டிய அணுகுமுறை ஆளுமை இல்லாததாக இருந்தது. ஹவுஸ் மேட்ஸ்கள் அவரவராக டீம் பிரிந்து கொண்டதை அனைவரும் முகச்சுழிப்புடன் பார்த்தனர். ஜி.பி.முத்துவின் ஆளுமை அங்கே வெளிப்படவில்லை. இதற்கு பின்னர் ஜி.பி.முத்து வழக்கம் போல் சாதாரண உறுப்பினர் போல் செயல்பட்டு கொண்டிருந்தார்.

பிக்பாஸ் அழைத்தும் மேக்கப் போடுவதில் கவனம் செலுத்திய ஜி.பி.முத்து
அவ்வப்போது யாருக்காவது ஏதாவது தேவை என்றால் ஜிபி.முத்துவை விட்டு பிக்பாஸிடம் பேச வைத்து வாங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் கதை சொல்லும் டாஸ்க், நடன போட்டி டாஸ்க் நடந்தது. இதில் பங்கு பெற்ற ஜோடிகள் சிலர் வென்றனர், சில தோற்றனார். நடனப்போட்டியிலும் ஜி.பி. முத்து வெற்றி பெற்றார். தொடர்ந்து கதை சொல்லும் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடந்து வருகின்றன. காலையில் கதை சொல்லும் போட்டி நடக்க பிக்பாஸ் அனைவரையும் லிவிங் ஏரியாக்கு அழைத்த பொழுது ஜி.பி. முத்து மட்டும் வராமல் பவுடர் போட்டுக் கொண்டும், தலையை வாரிக்கொண்டும் நேரம் கடத்தினார். தலைவரே இப்படி வரலாமா என்று கேள்வி எழுப்பினர்.

தலைவருக்கு பொறுப்பு வேண்டாமா? பிக்பாஸ் கண்டிப்பு
அப்போது பிக் பாஸ் திடீரென ஜி.பி.முத்துவை அழைத்து. "ஒரு தலைவர் என்றால் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், தலைவர் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களும் தலைவர் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் போல என்று எடுத்துக் கொள்ள நேரிடும். தலைவர் என்றால் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஹவுஸ்மேட்ஸுக்கு தண்டனை கொடுக்க அறிவுறுத்திய பிக்பாஸ்
இனிமேலாவது ஹவுஸ் மேட்சுகள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும், அவர்கள் பகலில் தூங்காமல் இருக்குமாறு கண்காணிக்க வேண்டும். அவர்கள் மைக் போடாமல் இருந்தால் அதையும் உடனடியாக கேட்டு போடச்சொல்ல வேண்டும், அதற்காக நீங்கள் விருப்பபட்ட சிறு தண்டனைகள் கொடுக்கலாம் என்று கண்டிப்பாக பிக் பாஸ் எடுத்து கூற, சரிங்க பிக்பாஸ் என்று ஜி.பி.முத்து ஒப்புக்கொண்டார்.


Click it and Unblock the Notifications