Sanjay Dutt Net Worth: கேஜிஎப் 2, லியோ பட நடிகர் சஞ்சய் தத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: பாலிவுட்டில் பிரபலமான வில்லன் நடிகரான சஞ்சய் தத் இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னா பாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான சஞ்சய் தத், கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆதீராவாக நடித்திருந்தார்.

அந்தப்படத்தில் உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டு வாள் ஏந்தி ஒரு சாமுராய் போல் அவர் தோற்றமளித்து ரசிகர்களை மிரள வைத்தார்.

Do you know KGF 2 and Leo actor sanjay dutt net worth

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மிரட்டலான வில்லனாக ஆதிரா என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் நடுங்க வைத்திருந்தார் சஞ்சய் தத். கேஜிஎஃப் படம் மூலம் உலகம் முழுவதும் பரீட்சியமான இவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

லியோ படத்தில்: இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய்தத் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமன்றி, தந்தை சஞ்சையும் மகன் விஜய்யும் கேங்ஸ்டர் கதாப்பாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

64வது பிறந்த நாள்: இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சஞ்சய் தத்தின் சொத்து மற்றும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சஞ்சய் தத், மும்பையில் நர்கிஸ் தத் சாலையில் ரூ. 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீடு மட்டுமில்லாமல் மும்பையில் இன்னும் சில வீடுகள் இவருக்கு இருக்கிறது.

Do you know KGF 2 and Leo actor sanjay dutt net worth

சொத்து மதிப்பு: மேலும், கார் பிரியரான இவர், ரெட் ஃபெராரி 599 ஜிடிபி காரையும், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ8 எல் டபிள்யூ12, ஆடி ஆர்8, ஆடி க்யூ7, பென்ட்லி கான்டினென்டல் ஜிடி, டொயோட்டா லேண்ட் குரூசர், மெர்சிடிஸ் எம்-கிளாஸ், லெக்ஸஸ் எல்எக்ஸ்470, போர்ஸ் எஸ்யூவி, ஹார்லி-டேவிட்சன் போன்ற அயல்நாட்டு சொகுசு காரையும் வைத்து இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.295 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X