Nayanthara: ஆடம்பர சொகுசு பங்களா.. ஜெட் விமானம்.. தலை சுற்ற வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு!

சென்னை: நடிகை நயன்தாரா அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச நட்சத்திரமாகவே இருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்க்கலாம்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா 1984ம் ஆண்டு பிறந்தார். டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக மாடலிங் மற்றும் விளம்பர துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் நுழைந்த நயன்தாரா, ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

do you know lady superstar nayanthara net worth

டயானா மரியம் குரியன்: தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, க்யூட்டாக பாவடை சட்டை போட்டுக்கொண்டு ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்று பாட்டு பாடி ஒட்டு மொத்த தமிழ் ஆடியன்சின் மனதில் இடம் பிடித்து விட்டார். இதையடுத்து, தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்திக்கு ஜோடியாக மாறினார்.

சர்ச்சையில் சிக்கினார்: சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்தார். வல்லவன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த போது, இருவரும் காதலிப்பதாக திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன்பின் ஏற்பட்ட பிரச்சனையால், மனவருத்தத்தால் தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட நயன்தாரா, மீண்டும் பில்லா படத்தில் புயலாக வலம் வந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார்: அதன் பின் பிரபுதேவாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நயன்தாரா, சில ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தார். அந்த பஞ்சாயத்துகளை முடித்துக்கொண்டு சிங்கப் பெண்ணாக மீண்டும், அறம், மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து என்னைக்குமோ நான் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து வருகிறார்.

do you know lady superstar nayanthara net worth

காதல் திருமணம்: இதையடுத்து, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு வாடகைத்தாய் மூலம் கடந்தாண்டு அக்டோபர் 10 ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என வித்தியாசமான பெயர் சூட்டி உள்ளனர்.

என் உயிர்.. என் உலகமே: இன்று தனது பிறந்த நாள் கொண்டாடி வரும் நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா பிறந்தநாளுக்கு கேக் வெட்டப்படுகிறது. அதில் "என் உயிர் மற்றும் உலகமே இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

நயன்தாரா சொத்து மதிப்பு: மேலும், நயன்தாராவின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இருவரு ஆண்டுகளாக சினிமாவை ஆட்சி செய்து வரும் நயன்தாராவின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா, சென்னை மற்றும் மும்பையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களாவை வைத்து இருக்கிறார்.

do you know lady superstar nayanthara net worth

விதவிதமான சொகுசு கார்: மேலும், அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அண்மையில் புதிய தொழில் ஒன்றை தொடங்கி உள்ளார். இதுபோக தனது சொந்தத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார். ஆக,நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு 200 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X